ரத்தன் டாட்டாவுக்கு உடல்நலம் பாதிப்பா? பரவிய வதந்திகளுக்கு அவரே கொடுத்த விளக்கம்!


தொழிலதிபர் ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இதுகுறித்து ரத்தன் டாட்டா விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் கடந்த1990 முதல்-2012 வரையிலான காலக்கட்டத்தில் டாட்டா குழுமத்தில் தலைவராக இருந்தார். அதன்பின்னர். 2016 முதல் 2017 வரை இடைக்காலத் தலைவராக செயல்பட்ட நிலையில் தற்போது டாடா அறக்கட்டளையை வழி நடத்தி வருகிறார்.

இந்தியாவின் பெரும் பணக்காரராக அறியப்படும் ரத்தன் டாட்டா தனது வருமானத்தில் சுமார் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை நன்கொடையாக அளித்ததன் மூலம் கொடுத்துச் சிவந்த கரத்திற்குச் சொந்தக்காரராக உள்ளார். டாடா நிறுவனம் நூறாண்டுகள் பெருமை கொண்டதாக இருந்தாலும் ரத்தன் டாடா அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த பின், டாடா சன்ஸ் நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது.

ரத்தன் டாட்டா உடல் நிலை

இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு 86 வயதாகும் நிலையில், திடீரென அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே அவரை உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாகவும், இதில் அவரது ரத்த அழுத்தம் மிகவும் குறைந்திருந்த நிலையில் அவரை ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாகவும், கார்டியாலஜிஸ் ஒருவரின் தலைமையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து மீடியாக்களிலும் இந்த செய்தி இடம்பிடித்தது. இந்த நிலையில் தன் உடல் நிலை பற்றிப் பரவிய செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரத்தன் டாடா தன்னைப் பற்றிய வந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஓர் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ரத்தன் டாட்டா தெரிவித்துள்ளதாவது:

’’வழக்கம் போல் வயது மூப்பு மற்றும் உடல்நிலை தொடர்பான மெடிக்கல் செக் அப்பிற்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். கவலைப்படும் வகையில் ஒன்றுமில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தின் போது ரத்தன் டாடா கொரொனா நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி அளித்தது குறிப்பிடத்தக்கது.


- Advertisement -spot_img

Trending News