திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தின் முதல் காதலி இவரா.. அந்தஸ்து பார்த்து கழட்டிவிட்ட சம்பவம்

தற்பொழுது வளர்ந்து வரும் தமிழ் சினிமாவிற்கு ஏற்ப டாப் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் அஜித். இவரின் படங்களுக்கு என்று தனி எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்பொழுது இவரின் முதல் காதலி குறித்த கிசுகிசு வெளியாகி பரபரப்பை உண்டுபடுத்துகிறது.

மேலும் தற்பொழுது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் தான் உண்டு வேலை உண்டு என இருந்து வருகிறார் அஜித். இவரா இது என வியக்கும் அளவிற்கு இவரின் ஆரம்ப காலத்தில் இவர் சக நடிகைகளோடு பேச்சுவார்த்தையில் இருந்திருக்கிறார். அவ்வாறு ஏற்பட்ட பழக்கத்தில் நடிகை சுவாதியை காதலித்து வந்திருக்கிறார்.

Also Read: திரிஷாவுக்கு பின் வந்து காணாமல் போன 6 நடிகைகள்.. 40 வயதிலும் நயன்தாராவை ஓரங்கட்டிய குந்தவை

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் குறிப்பிட்ட படங்களை மேற்கொண்டு நடித்து முன்னணி ஹீரோயினாய் வலம் வந்தவர் தான் சுவாதி. 90ஸ் காலகட்டத்தில் பெரும்பாலும் அஜித், விஜய்க்கு ஜோடியாக பல படங்களில் இடம் பெற்று இருப்பார்.

வான்மதி, உன்னை தேடி போன்ற படங்கள் அஜித் உடன் ஜோடியாக நடித்திருக்கிறார் சுவாதி. இது ஒரு புறம் இருக்க, தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடி என்றாலே நம் நினைவுக்கு வருவது அஜித் மற்றும் ஷாலினி தான். இவர்களின் அன்பிற்கு அடையாளமாக ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றார்கள்.

Also Read: ரம்மி நடிகரை உதாசீனப்படுத்திய நடிகை.. ஹீரோயின் திருமணத்தால் அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

அவ்வாறு இருக்க இவர் தன் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் ஏராளம். தன்னுடன் பணிபுரிந்த சக நடிகையான சுவாதியை துரத்தி துரத்தி காதலித்து வந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் இவர் புகழ் பெறவில்லை என்பதற்காக சுவாதியின் அம்மா இவர்களின் காதலுக்கு தடையாக இருந்துள்ளார்.

மேலும் இனி தன் மகளை பின் தொடரக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டுவிட்டாராம். அதைத் தொடர்ந்து சுவாதி இடம் ஒருபொழுதும் இவர் தொடர்பு கொள்ளவில்லையாம். இது போன்ற ஏமாற்றங்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தன் நடிப்பில் ஆர்வம் காட்டி தற்பொழுது புகழின் உச்சியில் இருந்து வருகிறார் அஜித்.

Also Read: பாவனாவுக்கு காரில் நடந்த கொடூரம்.. 37 வயதில் 86 படங்கள், கடந்து வந்த பாதை

Trending News