Sirakadikkum Asai Rohini Family Photo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதல் இடத்தை பிடித்து மக்களின் ஃபேவரிட் ஆக மாறியது சிறகடிக்கும் ஆசை சீரியல் தான். இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் மக்களை கவரக்கூடிய
எதார்த்தமான நடிப்பையும் கொடுத்து வருகிறார்கள்.
முக்கியமாக முத்துவின் பேச்சு நடவடிக்கையும் தான் இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்து வருகிறது. அப்படிப்பட்ட முத்துவை ஆட்டிப்படைக்கும் வகையில் வில்லி கேரக்டரில் ரோகினி சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல்களை வாங்கி வருகிறார்.
வில்லியாக இருந்தாலும் நடிப்பில் எந்தவித குறைச்சலும் சொல்ல முடியாத அளவிற்கு ரோகிணி கதாபாத்திரம் பெஸ்டாக இருக்கிறது. அப்படிப்பட்ட ரோகினியின் நிஜ வாழ்க்கையை பற்றி தற்போது பார்க்கலாம். இவருடைய உண்மையான பெயர் சல்மா அருண்.
கணவருடன் இருக்கும் ரோகினி

இவருக்கு சீரியலில் கல்யாணி என்ற பெயருடன் ஏழை வீட்டு பெண்ணாக இருந்தாலும், ரோகிணி என்ற பெயரை மாற்றிக் கொண்டு பணக்கார மருமகளாக நடித்து வருகிறார். இவர் நிஜத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்து படிப்பை முடித்தது சென்னையில் தான்.

ஆரம்பத்தில் மாடலிங்கில் முயற்சி செய்து பிறகு சில விளம்பரங்களில் நடித்தார். அதன் பிறகு விஜய் டிவியில் நம்ம வீட்டுப் பொண்ணு என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பாரதி கண்ணம்மா 1 மற்றும் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு எதிராக சமையல் போட்டியில் கலந்து கொண்ட கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் நடிகைக்கு அண்ணியாக வில்லி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தான் விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் வில்லி கேரக்டரில் ரோகிணியாக நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் இவருடைய குடும்ப புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கிறது. அதாவது இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். மகனை பார்ப்பதற்கு அச்சு அசலாக அம்மாவை போலவே இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.