வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டிடிஎப் வாசனுக்கு இவ்வளவு கோடி சம்பளமா.? ஒரே படத்தில் அடித்த சுக்கிர திசை

Youtuber TTF Vasan: திரும்புகிற இடமெல்லாம் யூடியூப்-யில் வீடியோ போட்டு அதன் மூலம் அனைவரும் பிரபலமாகி வருகிறார்கள். முதலில் இதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பித்த நிலைமை மாறி பேரும் புகழும் கிடைக்கிறது என்பதற்காக என்னவெல்லாம் பண்ணனுமோ அதை எல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள். இதனாலே யூட்யூப் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.

இதன் மூலம் பேமஸான சிலர் சினிமாவிலும் காலடியை பதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் தற்போது டிடிஎப் வாசன் ஹீரோவாக நடிக்க வந்து விட்டார். இயக்குனர் செல்அம் எழுதி இயக்கும் மஞ்சள் வீரன் படத்தில் இவர் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி ஆகியோர் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.

Also read: பத்து வருஷமா திருப்பி அடித்த கர்மா.. வடிவேலுக்கு இதெல்லாம் பத்தாது என கூறும் பிரபலம்

இப்படத்தின் பட்ஜெட் மொத்தமே ஆறு கோடியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவருக்கு பிடித்தமான புல்லட்டில் இருந்து கொண்டு விலிங் செய்தபடி வெளியாகி உள்ளது. அத்துடன் இவருடைய யூட்யூபை அதிகமாக பாலோ பண்ணி வருவது 2k கிட்ஸ் தான். அதனாலேயே இவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவாக வந்திருக்கும் இவருடைய சம்பளம் என்னவென்று வெளி வந்திருக்கிறது. இதை கேட்டு அதிர்ச்சியாகும் அளவிற்கு இத்தனை கோடி சம்பளமா என்று சினிமாவில் உள்ள பலரும் வாயடைத்து போய் இருக்கிறார்கள். ஒரே படத்தின் மூலம் அடித்தது சுக்கிர திசை என்று சொல்லும் அளவிற்கு இவருடைய சம்பளம் 1.8 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.

Also read: ரோலக்ஸ் மாதிரி அடுத்த ரத்தக் கலரியான ஹீரோவை களம் இறக்கிய லோகேஷ்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

இதற்கு முன்னதாக வந்த எத்தனையோ ஹீரோக்கள் இந்த சம்பளத்தை எட்டுவதற்கு படாத பாடு பட்டு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஏற்கனவே நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த சம்பளத்தை இன்னும் அவர்களால் எட்டவே முடியவில்லை.
இப்படி இருக்கும் பட்சத்தில் இவருடைய சம்பளம் கோடிக்கணக்கில் இருப்பது மிகவும் அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் விதமாக இருக்கிறது.

யூட்யூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த பிறகு சினிமாவிலும் அதுவும் முதல் படத்திலேயே இவ்வளவு கோடி சம்பளம் வாங்கும் இந்த ஒரு விஷயம் தான் தற்போது கோலிவுட்டில் அனைவரும் பேசும் பொருளாக இருக்கிறது. இப்படித்தான் குக் வித் கோமாளி மூலம் பிரபலமாகி விட்டு படத்தில் ஹீரோ ஆகிவிட்டோம் என்று அஸ்வின் கொஞ்சம் ஓவராகவே அதம்பல் பண்ணிட்டு வந்தார். இதே போல் ஓவரா அலப்பறை பண்ணிட்டு வருகிறார் டிடிஎப் வாசன். எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

Also read: நிஜமான பரியேறும் பெருமாளாக அவமானப்பட்டவர் இவர்தான்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News