புதன்கிழமை, டிசம்பர் 4, 2024

கங்குவாவில் நடித்த நடிகர்தான் சூர்யா45 படத்திலுமா? சூப்பர் அப்டேட்

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸான படம் கங்குவா. இப்படத்தில் நட்டி நட்ராஜ், பாபி தியோல், திஷா பதானி, கிங்ஸ்லி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இப்படத்தின் ரிலீசுக்கு முன் புரமோசனின் படக்குழு கூறியபடி, இப்படம் இல்லை என ரிலீசான முதல் நாளே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ள நிலையில், படக்குழுவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இப்படத்தை அடுத்து, சூர்யா 45 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சமீபத்தில், பொள்ளாச்சி அருகேயுள்ள மாசாணியம்மன் கோயில் சாமி கும்பிட்ட படக்குழுவினர், பூஜை போட்டனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகின. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஹாரர். திரில்லர், ஆக்சன் பாணியில் இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைக்களத்துடன் நடித்து வரும் சூர்யா, இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி தன்னிடம் கதை கேட்டபோதே, இம்பரஸ் சூர்யா, கேட்டவுடனே ஓகே செய்ததாக சமீபத்திய பேட்டியில் பாலாஜி கூறியிருந்தார்.

ஏற்கனவே, சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் புறநானூரு, பாலாவின் வணங்கான் படங்களையே வேணாம் என விலகிய சூர்யா, ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடிக்க காரணம் இருக்கும் எனவும் இப்படம் இரண்டு பேருக்குமே ஹிட் கொடுக்கும் படமாக அமையும் என கூறப்படுகிறது.

சூர்யாவுடன் 2வது முறையாக இணைந்து நடிக்கும் நடிகர்!

இந்த நிலையில், சூர்யா 45 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நட்டி நட்ராஜ் நடிப்பதாகத் தகவல் வெளியாகிறது. ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்து அசத்திய நட்டி, கடைசியாக சூர்யாவுடன் இணைந்து கங்குவா கேரக்டரில் நடித்திருந்தார். பேராசை பிடித்த கேரக்டரில் நடித்து அசத்திய நிலையில் சூர்யா 45 படத்திலும் நடிப்பில் அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒருவேளை முக்கிய ரோலா, அல்லது வில்லன் கேரக்டரா என இனித்தான் தெரியவரும். அதனால் படம் மீது எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News