வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அதிமுகவுக்கு விஜய் வைத்த டிமெண்ட்.. கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கா.?

Vijay : விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு அச்சம் வந்துள்ளது. எப்படி பார்த்தாலும் விஜய் தொடங்கிய கட்சியால் வாக்குகள் சிதறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் விஜய் பல மேடைகளில் பேசும்போது அதிமுகவை தாக்கி இதுவரை பேசியதில்லை.

இந்த சூழலில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிக்கையாளர் பிரியன் ஒரு யூட்யூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் எடப்பாடி இடம் விஜய் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார்.

ஆனால் விஜய் வைத்த டிமாண்டால் அதிமுக அதிர்ந்து போய்விட்டது. அதாவது 60 எம்எல்ஏ சீட்டு மற்றும் துணை முதல்வர் பதவியை கேட்டுள்ளனர். விஜய் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக நிறைய கட்சிகள் அதிமுகவுடன் சேர ஆசைப்படும். அவர்களுக்கும் குறிப்பிட்ட சீட்டுகள் கொடுக்க வேண்டும்.

அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா

இதனால் அதிமுக யோசனை செய்ததாக பிரியன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேற ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கட்சியை தொடங்கியுள்ளோம்.

தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க கூடும். முதலில் தனித்து போட்டியிடுவதே நம்முடைய பலத்தை பற்றி அறிய முடியும் என்ற முடிவுக்கு விஜய் வந்து விட்டாராம். ஆகையால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து தான் போட்டியிட போகிறார்.

இதில் அவர் பெரும் வாக்குகள் வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருக்கிறார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் சரி, தோற்றாலும் சினிமாவுக்கு திரும்பாமல் தொடர்ந்து அரசியலில் தான் களம் காண உள்ளார்.

Trending News