Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

விஜய் சேதுபதிக்காக இப்படியொரு முடிவா? கார்த்திக் சுப்புராஜ் நிராகரித்த அந்தப் பெரிய வாய்ப்பு எது தெரியுமா?

விஜய் சேதுபதிக்காக இப்படியொரு முடிவா? கார்த்திக் சுப்புராஜ் நிராகரித்த அந்தப் பெரிய வாய்ப்பு எது தெரியுமா?

சினிமாவில் ஒரு இயக்குநரின் முதல் படமே அவருக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத் தருவது என்பது அரிதான விஷயம்.அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது ‘பீட்சா’.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன்,அவருடைய சினிமா பயணத்திலும் டர்னிங் பாயிட்னாக அமைந்தது.


ஆனால்,இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதற்கு முன்பாக சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.குறிப்பாக, ‘பீட்சா’படத்தின் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,நடிகர் சித்தார்த்தை ஹீரோவாக நடிக்க வைத்தால் படத்தின் முழு பட்ஜெட்டையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். இது கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது.


இருப்பினும்,இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதில் கார்த்திக் சுப்புராஜுக்கு தயக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.சித்தார்த் படத்தில் இணைந்தால்,அவருக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதால் தான் எழுதிய கதையின் கரு எந்தவிதத்திலும் மாறிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.


இதனால்,அந்த ஆஃபரை ஏற்காமல்,தயாரிப்பாளர் சி.வி.குமாரின் ஆதரவுடன் விஜய் சேதுபதியையே கதையின் ஹீரோவாக தேர்வு செய்துள்ளார்.
இந்த முடிவு பின்னாளில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றை உருவாக்கியது.


இன்று விஜய் சேதுபதி தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.அதேபோல்,கார்த்திக் சுப்புராஜும் தனித்துவமான கதைகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அன்று கார்த்திக் சுப்புராஜ் எடுத்த அந்த முடிவு,’பீட்சா’ படத்தின் வெற்றிக்கு மட்டுமல்லாமல்,இருவரின் சினிமா பயணத்திலும் டர்னிங் பாயின்டாக அமைந்தது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.