சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அவருடைய படு தோல்வி படமான பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையிடுவதற்கான அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதற்காக அந்தப் படத்தை புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, ரஜினி மீண்டும் டப்பிங் பேசியுள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற நல்ல நல்ல படங்களை எல்லாம் ரீ ரிலீஸ் செய்யாத ரஜினி, பாபா படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மறு ஆக்கம் செய்கிறார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
Also Read: உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய 6 நடிகர்கள்.. நிஜ சூப்பர்ஸ்டாராய் வாழும் ஹீரோக்கள்
அதை இப்போது திரை விமர்சகர் ஆன பிஸ்மி உடைத்து பேசி இருக்கிறார். பாபா படத்தின் மூலம் ரஜினிக்கு லாபம் ஏற்படுவதை விட அந்தப் படத்தில் இருக்கும் இந்துத்துவ கருத்துக்களை இந்த சமயத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தான் முக்கிய காரணம்.
பொதுவாக ரஜினி மனதில் நிலவும் கருத்து என்னவென்றால் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்று தனித்தனி நாடு இருக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு தான் இல்லை. அனேகமாக ஒரு நாடு இருக்கிறது. அதுவும் இந்தியா, இந்துக்களின் நாடு என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
Also Read: புது பொலிவுடன் வெளியான பாபா படத்தின் டிரைலர்.. ட்விட்டரில் கூடுதல் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்
இவருடைய பேச்சைப் பார்த்தால் இந்தியா இந்துக்களின் அகண்ட பாரதம் என்ற கருத்தை சில அரசியல் கட்சிகளைப் போலவே இவரும் பிரதிபலிக்கிறார் என்பது தெளிவாகிறது. உண்மையாகவே இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை பள்ளி புத்தக முதல் அனைத்திலும் போதிக்கின்றனர்.
ஆனால் ரஜினிக்கு இந்தியா ஒரு இந்துக்களின் நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கிறது. இதேபோன்ற கருத்து தான் மத்தியில் ஆளும் கட்சிக்கும் உள்ளதால், 2014 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சி அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றால் ரஜினி நினைப்பது நடக்கும். ஆகையால்தான் பாபா படம் ரீ ரிலீஸ்க்கு பின்னால் இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்பதை காரணத்துடன் பிஸ்மி உடைத்து கூறியுள்ளார்.