புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தின் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?. விக்னேஷ் சிவனின் ஈகோவால் வந்த பிரச்சனை.!

அஜித், வினோத் கூட்டணியில் வெளியான துணிவு படம் வசூலில் பட்டையை கிளம்பி வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் மீண்டும் இவர்கள் கூட்டணியில் படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதமே தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது பிப்ரவரி மாதம் என படப்பிடிப்பு தள்ளிப் போய் உள்ளதாம். இதற்கெல்லாம் காரணம் விக்னேஷ் சிவன் தான்.

Also Read : ரசிகர்கள் தான் எப்பொழுதும் அடித்துக் கொள்வார்கள்.. விஜய்,அஜித் தயாரிப்பாளர்களை அடித்துக் கொள்கிறார்கள்.!

ஏனென்றால் ஆரம்பத்தில் ஏகே 62 படத்தில் திரிஷா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவனால் திரிஷா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது. அதன் பிறகு இரண்டு, மூன்று நடிகைகளிடம் விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் இப்போது வரை அஜித் படத்திற்கு கதாநாயகி கிடைக்கவில்லையாம். இதனால் தான் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.

Also Read : பாகுபலி, ஆர்ஆர்ஆர் பிறகு துணிவு தான்.. இத்தனை வருடத்திற்கு பிறகு தடைகளை தகர்த்தெறிந்த அஜித்

அதாவது கதாநாயகி இல்லாமல் கதாநாயகன் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஒரு வாரத்திற்கு படப்பிடிப்பு நடத்தலாம் என்ற முடிவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். ஒரு டாப் நடிகரின் படத்தில் இவ்வாறு கதாநாயகி கிடைக்காமல் ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதுவும் அஜித் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் விக்னேஷ் சிவனின் ஈகோ தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் அவரால் தான் முதலில் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகினார். இப்போது வேறு ஒரு ஹீரோயினுக்காக வலை வீசி தேடி வருகிறார். ஆகையால் அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் யார் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Also Read : அஜித் பற்றி உண்மையை போட்டு உடைத்த ஹெச்.வினோத்.. கல்யாண் மாஸ்டருக்கு ஆச்சரியத்தை கொடுத்த AK

Trending News