ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கரகாட்டக்காரன் கனகாவா இது? அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் தற்போது வைரல்

80களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா. இவர், எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பாவாங்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளாவார். கடந்த 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் என்ற திரைப்பத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தை கங்கை அமரன் இயக்க, ஹீரோவாக ராமராஜன் நடிக்க அவருக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். இப்பத்தில் இடம்பெற்ற மாங்குயிலே பூங்குயிலே, குடகுமலை காற்றுவந்து, மாரியம்மா மாரியம்மா உள்ளிட்ட பாடல்கள் இளையராஜாவின் இசையில் அப்போது முதல் இன்று வரை கிராமத்து மண் வாசனை கமழ்வதாகவும், வீட்டு நிகழ்ச்சிகளின்போது, அவை ஸ்பீக்கரில் ஒளிபரப்படுவதாகவும் உள்ளது.

இதில், இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில் காமெடி எவர்கிரீன். முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்தால், அடுத்து, 1990 ஆம் ஆண்டு வெளியான பெரிய இடத்து பிள்ளை என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். இப்படத்தை செந்தில் நாதன் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அடுத்து,அதே ஆண்டில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி படத்தில் கிராமத்துப் பெண் கேரக்டரில் நடித்த கனகா ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இளையராஜாவின் இசையில் ரசிகர்களின் மனதில் நின்றது.

அதேபோல் கார்த்திக்குடன் கனகா இணைந்து நடித்த பெரிய வீட்டு பணக்காரன் படமும் எவர் கிரீன் மூவி ஆகும்.என்.கே. விஸ்வநாதன் இயக்கிய இப்பட த்தில் கார்த்திக் -கனகாவின் கெமிஸ்ட்ரி ஒவ்வொரு பாடல் காட்சியிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் வெற்றிக்கு இளையராஜாவின் அட்டகாசமான இசையில் அமைந்த நிற்கட்டுமா போகட்டுமா, மல்லிகையே உள்ளிட்ட பாடல்களும் பேசப்பட்டது.

இதேஜோடி, 1996 ஆம் ஆண்டு வெளியான கட்டப்பஞ்சாயத்து என்ற படத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தை ஆர்.ரகு இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் தேவிகாவின் வாரிசாக அறிமுகமானாலும் தன் குணத்தாலும், அழகாலும், கிராமத்துப் பெண் வேடத்திற்குப் பொருந்திப் போகும் முக லட்சணத்திற்காகவே அவர் கொண்டாடப்பட்டார்.

40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் சினிமாவில் கடைசியாக 1999 ஆம் ஆண்டு,விரலுக்கேத்த வீக்கம் என்ற படத்தில் நடித்த நிலையில், அதன்பின், சில ஆண்டுகளாகவே திரைத்துறையில் நடிக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் மூத்த நடிகை குட்டி பத்மினி அவர்களை நேரில் சந்தித்து, இருவரும் ஒன்றாக ஐஸ்கிரீம் சாப்பிட்டதாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் கனகாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 90களில் சினிமாவில் கிராமத்து பெண் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி, முன்னணி ஹீரோக்களுடன் நடித்த கனகாவா இது? ஏன் இப்படி அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக கனகாவின் அம்மா தேவிகா கடந்த 2002 ஆம் ஆண்டு இறந்தார். அதுவே அவருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பா ஏற்கனவே பிரிந்துவிட்ட நிலையில் மீண்டும் அவரிடம் வந்தபோது ஏற்க மறுத்துவிட்டார். தன் அம்மாவின் மீது பாசமான இருந்தவர் அவர் இறந்தபின், ஆவியுடன் பேசுவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் அவர் இறந்துபோனதாகவும் தகவல்கள் பரவின.

பல்வேறு விமர்சனங்கள் வதந்திகளுக்கு மத்தியில், கனகா சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் ரசிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இப்போது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இதில் கரக்காட்டக்காரன் கனகா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிப்போயுள்ளதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் தனிமையிலேயே இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று கூட தகவல் வெளியாகிறது.

kanaka
kanaka

Trending News