புதன்கிழமை, ஜனவரி 1, 2025

100 படங்களுக்கு மேல் நடித்த ஜனகராஜ்க்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா.. இதனாலே ஒதுங்கிய கமல், ரஜினி!

எண்பதுகளில் நகைச்சுவை நடிகரான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு போட்டியாக காமெடி நடிகராக 100 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் ஜனகராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனின் ஆரம்ப கால கட்டங்களில் நடித்து அவர்களுடன் அதிகமாக பணியாற்றியவர்.

ஆனால் இவரிடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தினால் அவரைவிட்டு, தற்போது வரை ரஜினி மற்றும் கமல் இருவரும் தூரமாக விலகி இருக்கின்றனராம். ஏனென்றால் ஜனகராஜ் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நண்பர்களுடன் எப்பொழுதுமே வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பாராம்.

எந்தப் பேச்சு எடுத்தால் அதில் எதிரும் புதிருமாக பேசி, அது சரியில்லை இது சரியில்லை அப்படி இருந்திருக்கலாம் இப்படி இருந்திருக்கலாம் என பேசுபவர் உடன் சண்டையை வளர்த்துக் கொள்வதே இவருடைய பழக்கம்.

இதனாலே கமல்ஹாசன் மற்றும் ரஜினி இருவரும் தங்களுடைய படப்பிடிப்புத் தளத்தில் ஜனகராஜ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை அறவே தவிர்த்து விடுவார்களாம். குறிப்பாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1988ஆம் ஆண்டு வெளிவந்த படம் சத்யா. இந்தப் படம்தான் கமல் கடைசியாக ஜனகராஜ் உடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

அதன் பிறகு கமல் மற்றும் ரஜினி இருவரும் ஜனகராஜ் உடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து விட்டாராம். இவ்வாறு பிறருக்கு பிடிக்காத பழக்கத்தை விட்டுவிடுவதுதான் அவருக்கும் அவரைச் சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கும் நல்லதாக அமையும்.

ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத ஜனகராஜ், தமிழ் சினிமாவில் சில காலம் நடிக்காமல் பட வாய்ப்பை இழந்ததற்கு அவருடைய பழக்க வழக்கமே காரணம். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Trending News