வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரட்சிதா எக்ஸ் பிக் பாஸ் 7ல் என்ட்ரி ஆக இதான் காரணமா.? மனைவியுடன் நெருக்கமா இருந்தவரை பழி தீர்ப்பது உறுதி

Bigg Boss Season 7 Controversy: காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் அதிரடியாக களமிறங்கினார்கள். அதில் சீரியல் நடிகர் தினேஷும் ஒருவர்.

இவர் இந்த சீசனில் ஸ்ட்ராங்கான கண்டஸ்டன்ட்டாக இருந்து கன்டென்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் பிக் பாஸ் சீசன் 7ல் என்ட்ரி ஆகுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இவருடைய மனைவி சீரியல் நடிகை ரட்சிதா உடன் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சீரியல் நடிகர் ஒருவர் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்ற முடிவுடன் தான் தினேஷ் சீசன் 7ல் கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் நடிகையாக மாறிய ரட்சிதா ‘சரவணன் மீனாட்சி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்தார்.

அதிலும் குறிப்பாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலில் நடித்த போது அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு இணைந்து நடித்தார். அப்போது இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து காதல் மலர்ந்திருக்கிறது.

ஆனால் ரட்சிதா தினேஷை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இருப்பினும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை. சிறிது காலம் பிரிந்து வாழ தான் முடிவெடுத்து இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது சைடு கேப்பில் விஷ்ணு ரட்சிதாவிற்கு கோல் போட்டது தினேஷை வெறியேற்றியது.

விஷ்ணுவை சந்தி சிரிக்க வைக்கத்தான் இப்போது தினேஷ் சீசன் 7 கலந்து கொண்டிருக்கிறார். சீக்கிரமே இவர்கள் இருவரும் முட்டிக்கொண்டு விஷ்ணுவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிவரும். பிக் பாஸ் சீசன் 7ல் அமுல் பேபியை தினேஷ் வச்சு செய்யப் போறது உறுதி.

Trending News