வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் டிவி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா.? ஆதாரத்தோடு அம்பலமான உண்மை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக விஜய் டிவியை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர்.

அதில் கோமாளியாக வரும் புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு பங்கேற்று வந்த புகழ் தற்போது சினிமாவில் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

Also read:காதல் மனைவியை கரம் பிடித்த விஜய் டிவி புகழ்.. காட்டுத் தீயாய் பரவும் திருமண புகைப்படங்கள்

குக் வித் கோமாளியின் மூலம் காமெடியனாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் புகழ் தன்னுடைய நீண்ட நாள் காதலி பென்சியை பெரியவர்கள் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவது ரசிகர்கள் பலருக்கும் தெரியும். அந்த வகையில் புகழின் திருமணத்திற்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தை அடுத்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Also read:ஹீரோவாக குக் வித் கோமாளி புகழ்.. கலக்கலான டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் புகழுக்கு இது இரண்டாவது திருமணம் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தாலும் அவருடைய முதல் மனைவி யார் என்ற தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

pugazh-actor
pugazh-actor

ஏனென்றால் புகழ் அவருடைய தற்போதைய மனைவி பென்சியை தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் திருமணம் செய்து கொண்டாராம். தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புகழ் அந்த விஷயத்தை வெளியே கசியாதவாறு மறைத்திருக்கிறார். தற்போது பெரியவர்கள் சம்மதத்துடன் அவர் தன் மனைவியை முறைப்படி மீண்டும் இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய முதல் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Also read:காதலியை கரம்பிடிக்கும் புகழ்.. வெளியான திருமண தேதி

Trending News