சனிக்கிழமை, நவம்பர் 9, 2024

கோட் படத்தின் கதை இதுவா.? விஜய் ஃபேன்ஸ்க்கு செம ட்ரீட், அதிரி புதிரி அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மைக் மோகன் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான போஸ்டர் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் சமீபத்தில் வெளியான மூன்றாவது சிங்கிள் பாடல் மட்டும் ட்ரோல் செய்யப்பட்டது. விஜய்யை இளம் லுக்கில் காட்டுகிறேன் என்ற பெயரில் வெங்கட் பிரபு காமெடி செய்து விட்டதாக ரசிகர்கள் கொதிப்புடன் கூறி வந்தனர்.

அவர்களை கூல் செய்யும் விதமாக தற்போது அவர் செம அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களும் ஒரு பக்கம் வைரல் ஆகி வருகிறது. அதன் படி வெங்கட் பிரபு கோட் திருவிழா ஆரம்பம் ஆயிடுச்சு.

வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்

இது கற்பனை கதை தான். ஆனால் நிஜத்திற்கு அருகில் இருப்பது போல் இருக்கும். படத்தில் SATS என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அப்படி என்றால் special Anti terrorist squad என்று அர்த்தம். அதில் குரூப்பாக சிறப்பான வேலையை செய்த ஒரு டீம் பின்னால் ஒரு பிரச்சனையை சந்திக்க நேர்கிறது.

எப்பவோ செய்த ஒரு விஷயம் தன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு என அவர் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே இப்படம் டைம் டிராவல் அம்சம் கொண்டது என கூறப்பட்டது.

ஆனால் இப்போது பார்த்தால் விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் போல் இதிலும் ஒரு ஸ்குவாட் இருக்கின்றனர். இதனால் பக்கா ஆக்ஷன் படமாக கோட் இருக்கும் என தெரிகிறது. அதைத்தான் வெங்கட் பிரபுவும் கூறி இருக்கிறார்.விஜய்யை நீங்கள் எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களோ அது அத்தனையும் படத்தில் இருக்கும்.

அவருடைய தோற்றமே வேற லெவலில் இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார் ஆக மொத்தம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் வெங்கட் பிரபு திரையில் சொன்னதை சாதித்து காட்டுவாரா என்பது சில வாரங்களில் தெரிந்து விடும்.

கோட் திருவிழா ஆரம்பம் ஆயிடுச்சு

- Advertisement -spot_img

Trending News