வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இதுதான் சொந்த செலவுல சூனியம் வைக்கிறதா.? கல்லா கட்ட முடியாமல் தவிக்கும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர் என்பதை காட்டிலும் விநியோகஸ்தராக தான் தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். இங்கு வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாகத்தான் வெளியிடுகிறார்.

மேலும் உதயநிதி வெளியிடும் படங்களுக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகளும் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் கலகத்தலைவன்.

Also Read : உங்க வாயினா எதுனாலும் பேசுவீங்களா.. உதயநிதியை வச்சிக்கிட்டு மேடையில் கடுப்பேற்றிய மிஸ்கின்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லவ் டுடே படத்தால் கலகத் தலைவன் படத்தின் வசூல் பாதிப்பு அடைந்துள்ளது. கலகத் தலைவன் படத்தை உதயநிதி தான் தயாரித்துள்ளார். அதேபோல் லவ் டுடே படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டுள்ளார்.

ஆகையால் தான் தயாரித்து, நடித்து வெளியாகி இருக்கும் படத்தை விட வினியோகம் செய்த படம் அதிக வசூல் செய்துள்ளதே என்ற கவலையில் உதயநிதி உள்ளாராம். அதாவது லவ் டுடே படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 நாட்களில் 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் 1.94 கோடி வசூல் செய்தது.

Also Read : மொக்க படத்தை தலையில் கட்டிய ஆர்யா.. உண்மையை வெளியே சொல்லி அசிங்கப்படுத்திய உதயநிதி

ஆனால் கலகத்தலைவன் படம் நேற்று 1.11 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் அண்மையில் வெளியான கலகத் தலைவன் படத்திற்கு கிடைக்காத வரவேற்பை விட இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான லவ் டுடே படத்திற்கு தற்போதும் கிடைத்து வருகிறது.

இவ்வாறு உதயநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல தான் விநியோகம் செய்த லவ் டுடே படத்தால் தன்னுடைய சொந்தப் படமான கலகத் தலைவன் படத்தின் வசூல் பாதித்துள்ளது. ஆனாலும் கலகத் தலைவன் படத்தில் உதயநிதி நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read : கமலஹாசனுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான்தான் காரணம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட உதயநிதி

Trending News