வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Venkatesh Bhat : செப் தாமு மீது வெங்கடேஷ் பட்டுக்கு கோபமா.? குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்

இப்போது என்ன ஊடகம் எடுத்தாலும் அதை குக் வித் கோமாளி மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரை பற்றிய செய்திகள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜய் டிவியில் 2006 இல் இருந்து மீடியா மசோன் என்ற தொலைக்காட்சி இவர்களுக்கு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது. அது இது எது, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் என பல வெற்றி நிகழ்ச்சியை விஜய் டிவிக்கு கொடுத்துள்ளது. பிக் பாஸ்க்கு பிறகு ஒரு கலகலப்பான நிகழ்ச்சி வேண்டும் என விஜய் டிவி கேட்டுள்ளது.

அப்போது தான் மீடியா மசோன் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு விஜய் டிவி மீடியா மசோன் நிறுவனத்தை அழைத்து இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நீங்கள் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் என்று கூறியுள்ளனர். இத்தனை வருடமாக விஜய் டிவிக்கு வெற்றிகரமான நிகழ்ச்சியை கொடுத்து வந்த இந்த தயாரிப்பு நிறுவனம் திடீரென இப்படி சொன்னதால் விஜய் டிவியிலிருந்து விலகி விட்டனர்.

குக் வித் கோமாளியில் நடந்த சம்பவம்

மேலும் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை பற்றி பேசுவதற்காக செல்லும்போது தான் இங்கு சமையல் நிகழ்ச்சி தொடங்கலாம் என்று எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி மொத்த டீமுமே சன் டிவிக்கு செல்வதாக தான் இருந்தது.

தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவருமே தங்களது சமூக வலைத்தளத்தில் விரைவில் நாங்கள் வேறு ஒரு நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறோம் என்று கூறியிருந்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே தாமு அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார்.

அதாவது அதன் பிறகு விஜய் டிவி தாமுவை அழைத்து சமாதானமாக பேசி இந்த நிகழ்ச்சியில் அவரை தொடர்ந்து இருக்க வைத்துள்ளனர். வெங்கடேஷ் பட் சமையல் சமையல் நிகழ்ச்சியிலிருந்து மீடியா மசோனுடன் தான் பயணித்து வருகிறது. தாமு திடீரென பதிவை நீக்கிய உடன் வெங்கடேஷ் பட் ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதாவது பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ, பதிவை நீக்கினால் உறைத்தது மறைந்து விடுமா, இதனால் உனக்கு கிடைப்பது எதுவானாலும் மகிழ்ச்சி என்றும் எனக்கே, சொல் தவறினாலும் நட்பு மாறாது என்று வெங்கடேஷ் பட் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

தாமுவின் சூழ்நிலையை புரிந்துகொண்டு இந்தப் பதிவை போட்டிருக்கிறார். இப்போதும் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் வெவ்வேறு சேனலில் வேலை பார்த்தாலும் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்து வருகிறது.

Trending News