Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அஜித்தை வெயிட்டாக கவனித்த ஐசரி கணேஷ்.. பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாக வாங்கும் AK 

அஜித்தை வெயிட்டாக கவனித்த ஐசரி கணேஷ்.. பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாக வாங்கும் AK

Ajith-AK64: இந்த வருடம் அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்த வந்து விட்டது. அதன் பிறகு அவருடைய அடுத்த பட அப்டேட் பற்றிய தகவல் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஆனாலும் ஏகே 64 படத்தை இயக்கப் போவது […]

Ajith-AK64: இந்த வருடம் அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்த வந்து விட்டது. அதன் பிறகு அவருடைய அடுத்த பட அப்டேட் பற்றிய தகவல் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

ஆனாலும் ஏகே 64 படத்தை இயக்கப் போவது ஆதிக் என்றும் தயாரிப்பது ஐசரி கணேஷ் என்றும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இது உறுதியான செய்தியாக உள்ளது. 

அனைத்து பேச்சுவார்த்தையும் முடிந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகளை இயக்குனர் செய்ய இருக்கிறார். அதேபோல் ஒரு நல்ல நாளில் இதன் அறிவிப்பும் வெளிவரும் என்கின்றனர். 

பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாக வாங்கும் AK 

ஆனால் அதற்கு முன்பாக இப்படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் அதில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் கசிந்து உள்ளது. அதன்படி ஆதிக் மொத்தமாக 270 கோடி பட்ஜெட் ஆகும் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.

இதில் அஜித்தின் சம்பளம் 180 கோடி ஆதிக் சம்பளம் 12 கோடி ஆகும். இதுவே 192 கோடி வந்துவிட்டது. அப்படி என்றால் மற்ற நட்சத்திரங்களின் சம்பளம், படப்பிடிப்பு செலவு என ஏகப்பட்டது இருக்கிறது. 

இது எல்லாம் 270 கோடிக்குள் முடிந்து விடுமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஆதிக் அதற்கு மேல் பட்ஜெட் செல்லாமல் பார்த்துக் கொள்வதாக தயாரிப்பாளருக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறாராம். 

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.