Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நடைப்பயிற்சிக்கு போக வேண்டும் ஆனால் கூட யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அமைதியாக இருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த ஈஸ்வரி நான் உன்னை கூட்டிட்டு போகிறேன் வா நாம் இருவரும் சேர்ந்து வாக்கிங் போகலாம் என சொல்லி இரண்டு பேரும் கிளம்பி விட்டார்கள்.
உடனே ராதிகா வந்து, நான் கோபியை கூட்டிட்டு போகிறேன். வயசான காலத்தில் உங்களால் விரைவாக நடக்க முடியாது. நீங்கள் வாக்கிங் போக வேண்டும் என்றால் பார்க்கிங் ஏரியாக்குள்ளையே போய்க்கொங்க என்று ஈஸ்வரி விட்டுவிட்டு கோபி மற்றும் ராதிகா பார்க்குக்கு போய் விடுகிறார்கள். ஆனால் ஈஸ்வரி நான் தான் அவனை கூட்டிட்டு கிளம்பினேன் நடுவுல இவள் வந்து என்னை ஏன் தடுக்கணும்.
என்னாலயும் போக முடியும் என்று ஈஸ்வரி தனியாக பார்க் போய்விட்டார். பிறகு கோபியால் விரைவாக நடக்க முடியவில்லை என்பதால் ராதிகாவை நீ போயிட்டு வா நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே ராதிகா வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் போது அங்கே பாக்கியமும் நடந்து கொண்டிருப்பதால் இரண்டு பேரும் பேசிக் கொண்டே போகிறார்கள்.
உடனே பார்க்குக்குள் நுழைந்த ஈஸ்வரி, கோபியை பார்த்து பேசுகிறார். இவர்கள் இரண்டு பேரும் நடந்து வரும் பொழுது பாக்கியம் மற்றும் ராதிகா பேசிக் கொண்டே போவதை பார்த்து கோபி சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் ஈஸ்வரி வயிற்றெரிச்சல் பிடித்து ராதிகாவுடன் சேர்ந்தால் பாக்யாவும் ராதிகா மாதிரியே ஆகிவிடுவாள் என்று கோபி இடம் சொல்கிறார்.
அதற்கு கோபி, அப்படியெல்லாம் எதுவும் ஆகாது ராதிகா ரொம்ப நல்லவள் என்று சொல்லிவிடுகிறார். உடனே ஈஸ்வரி நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாய் என்று சொல்லி புலம்பிக்கொள்கிறார். அடுத்ததாக கோபி ஹாலில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் மயூ படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது புத்தகத்தில் சந்தேகம் இருக்கிறது என்பதால் மயூ, கோபி இடம் சந்தேகம் கேட்கிறார்.
கோபியும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இனியா வந்து இவர்கள் இருவரும் இருப்பதை பார்த்து பொறாமைப் பட்டுக் கொள்கிறார். உடனே கோபியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வார்த்தைகளையும் சொல்லி பேச்சு கொடுக்கிறார். ஆனாலும் கோபி, மயூவுக்கு சொல்லிக் கொடுப்பதால் ஈஸ்வரி கோபப்பட்டு மயூவை திட்டி விடுகிறார். உடனே மயூ ரொம்ப பீல் பண்ணி ரூம்குள் போய்விடுகிறார்.
இந்த இனியா குணம் எப்பொழுதுமே மாறாது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து ஏதாவது செய்து பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறார். அத்துடன் ஈஸ்வரியும், மயூ தனக்காக குடும்பத்தை எதிர்த்து சாட்சி சொல்லி இருக்கிறார், அதுவும் சின்ன பிள்ளை என்பதை கூட ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் காயப்படுத்தும் அளவிற்கு ஈஸ்வரி பேசி விடுகிறார். ஆனால் இவ்வளவு நடந்தும் பாக்கியா எதுவும் பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார்.
அடுத்ததாக கோபியை ஹாஸ்பிடலுக்கு செக்கப் கூட்டிட்டு போக வேண்டும் என்று ராதிகா, கோபியை கிளம்ப சொல்கிறார். நீங்க கிளம்பி ரெடியாக இருங்க நான் மயூவை ஸ்கூலில் விட்டுட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி நான் கூட்டிட்டு போகிறேன் என்று கூப்பிடுகிறார். அப்பொழுது ராதிகா வந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபியை கூட்டிட்டு போய் விடுகிறார்.
இப்படி எதற்கெடுத்தாலும் எலியும் பூனையும் ஆகத்தான் ராதிகா ஈஸ்வரி மோதிக் கொண்டிருக்கிறார்கள். புதுசாக கல்யாணம் பண்ணிட்டு வந்த வீட்டில் தான் மாமியார் மருமகள் இப்படி நடந்து கொள்வார்கள். ஆனால் கல்யாணம் ஆகி பேரன் பேத்திகளை எடுத்த பிறகு கூட கோபி பொண்டாட்டி கிட்டயும் மாமியார் கிட்டையும் சிக்கி தவிக்கிறார்.