வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

வில்லங்கம் பிடித்த ராதிகா அம்மாவிற்கு கொடுத்த பதிலடி.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா, அல்லல்படும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரியின் தனிமையை போக்கி மனதை மாற்ற வேண்டும் என்று பொறுப்பான மருமகளாக பாக்யா ஒவ்வொரு முயற்சியும் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஈஸ்வரியை டைவர்ட் பண்ண வேண்டும் என்பதற்காக ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகலாம் என்று முடிவு பண்ணுகிறார். ஆனால் ஈஸ்வரி நான் எங்கும் வரவில்லை, நானும் வந்துவிட்டால் ஜெனி தனியாக இருப்பார் என்று சொல்கிறார்.

இதை கேட்ட ஜெனி நான் சமாளித்துக் கொள்கிறேன் நீங்க போயிட்டு வாங்க பாட்டி என்று பாக்கியவுடன் ஈஸ்வரியை அனுப்பி வைக்கிறார். ஹோட்டலுக்கு போன ஈஸ்வரியை பார்த்ததும் அங்கே இருப்பவர்கள் காது படவே தவறாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் ஈஸ்வரிடம் சென்று மனது புண்படும்படி கணவர் இறந்த கொஞ்ச நாளிலேயே இப்படி வெளியே வந்து விட்டீங்க.

ஈஸ்வரிக்கு குடைச்சல் கொடுக்கும் திருந்தாத கமலா

அதுவும் நல்லா போயிட்டு இருக்க ஹோட்டலுக்கு வந்து இருக்கீங்க என்று ரொம்பவே வன்மத்தை கக்கும் விதமாக ஈஸ்வரியை பார்த்து பேசி விட்டார்கள். இதை கேட்டதும் செல்வி, பாக்யாவிடம் போய் சொல்லுகிறார். அவர்களை திட்டிவிட்டு ஈஸ்வரியை சமாதானப்படுத்த போகிறார். ஆனால் ஈஸ்வரி என்னால் இங்கே இருக்க முடியாது என்னை வீட்டிற்கு கூட்டிட்டு போ என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

உடனே ஈஸ்வரியை பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். அங்கே போனதும் ஈஸ்வரி, பாக்யாவிடம் இனி என்னை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். நான் அந்த ரூம்குள்ளே அடைந்து கொள்கிறேன் என்னை வந்து எங்கேயும் கூப்பிட்டு போக வேண்டாம் என்று சொல்லுகிறார். இதை கேட்டதும் பாக்யா, அத்தை இவ்வளவு கோபமாக பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்கிறார்.

அப்பொழுது இனியா, பாட்டி என்னை காலேஜ் கூட்டிட்டு போகும் பொழுது ராதிகாவின் அம்மா பாட்டியை பார்த்து இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தினாங்க என்று சொல்கிறார். இதை கேட்டதுக்கு கோபத்துடன் வெளியே போய் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் அங்கே வந்த ராதிகாவிடமும் உங்க அம்மாவை எங்க அத்த விஷயத்துல தலையிட வேண்டாம் என்று சொல்லி வையுங்க.

தேவை இல்லாமல் எங்க அத்தை எங்க போறாங்க என்ன பண்றாங்க என்று பார்த்து மனச புண்படுத்தும் படி இனி பேசி விட்டாங்க என்றால் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு சொல்லிட்டேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு போய்விடுகிறார்.

உடனே வீட்டிற்குள் போன ராதிகா, அம்மாவிடம் கோபமாக பேசி என் அத்தை விஷயத்தில் நீ தலையிட வேண்டாம். கணவர் இறந்துவிட்டால் வீட்டுக்குள்ளே இருக்கணும் என்று என்ன கட்டாயம். அவர்கள் மனதிருப்திக்காக எதுவும் பண்ணிட்டு போறாங்க. தேவை இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்தும் படி இனி பேசினால் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று வில்லங்கம் பிடித்த அம்மாவை ராதிகா நல்ல நாலு கேள்வி கேட்டு பதிலடி கொடுத்து விட்டார்.

ஆனாலும் கொஞ்சம் கூட திருந்தாத ராதிகாவின் அம்மா ஓவராக தான் போகிறார். பாவம் தாத்தாவின் மறைவிற்குப் பிறகு அவருடைய ஞாபகத்தால் படும் அவஸ்தை விட சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் டார்ச்சர் தான் ரண வேதனையை கொடுக்கிறது. எப்படி இருந்த ஈஸ்வரி இப்படி ஆயிட்டாங்களே என்று பார்க்கும் போதே ரொம்பவே பாவமாக தான் இருக்கிறது.

ஆனால் பாக்யா இருக்கும் வரை ஈஸ்வரியை யாரும் எதுவும் பண்ண முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல பொறுப்பான மருமகளாகவும், ஈஸ்வரியை பத்திரமா பாதுகாத்துக் கொள்ளும் ஒரு கவசமாகவும் பாக்கியா எல்லா விஷயத்தையும் சரிவர செய்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News