புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தொப்புள் கொடி உறவை தூக்கி எறிந்த ஈஸ்வரி.. நிலைகுலைந்து போன கோபி, அடங்கிப் போன ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று பாக்கியா நிரூபித்துக் காட்டிவிட்டார். அத்துடன் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி எதை நினைத்தும் கவலைப்பட கூடாது என்று பாக்கியா ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்கிறார். அந்த வகையில் இனி நடந்து முடிந்து போன விஷயத்தைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பாக்கியா எல்லாரிடமும் சொல்லிவிட்டார்.

அடுத்து அனைவரும் சேர்ந்து ஒன்றாக பேசிக்கொண்டு சந்தோசமாக சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அப்பொழுது பாவப்பட்ட ஜென்மமாக கோபி, அம்மா என்று கூப்பிட்டு பாக்யா வீட்டிற்குள் நுழைகிறார். அத்துடன் ஈஸ்வரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கெஞ்சி கதறுகிறார். ஆனால் ஈஸ்வரி இதுவரை உன்னை நம்பி என் பிள்ளை என்ற பாசத்தில் கண்மூடித்தனமாக உனக்கு சப்போர்ட் பண்ணதெல்லாம் போதும்.

ஆடிய ஆட்டத்திற்கு அனுபவிக்கும் கோபி

இப்போ நீ கெஞ்சின மாதிரி தானே நான் உன்கிட்ட கெஞ்சினேன் எந்த தப்பும் பண்ணவில்லை என்று. அப்பொழுது நீ என்னை நம்பவே இல்லை. நீ உன் பொண்டாட்டி மாமியார் சேர்ந்து எனக்கு கொலைகாரி பட்டத்தை கொடுத்து நடுத்தெருவில் நிற்க வைத்தாய். இப்ப மட்டும் தான் உனக்கு அம்மா பாசம் புரியுதா என்று மொத்த ஆதங்கத்தையும் கோபியிடம் கொட்டி தீர்த்து விட்டார்.

அது மட்டுமல்ல என் பிள்ளையை இல்லை, எனக்கு ஒரே ஒரு பிள்ளை தான் இருக்கிறது. அதுவும் என் பாக்கியா தான் என்று பாக்கியா கையை பிடித்து கூப்பிட்டு வந்து அனைவரது முன்னாலையும் காட்டுகிறார். இதை எதிர்பார்க்காத பாக்கியா உணர்ச்சிபூர்வமாக பொங்குகிறார். நான் எப்பெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்கிறேனோ, அப்பெல்லாம் எனக்கு முதல் ஆளாக இருந்து உதவி பண்ணுகிறது பாக்கியா தான்.

இனி யாருக்காகவும் நான் பாக்கியவை விட்டுட்டு வரப்போவதில்லை. என்னை கடைசி வரை யார் பார்ப்பாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் பாக்யா இருக்கும் வரை எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. நீ எந்த காரணத்தை கொண்டும் என் முகத்தில் முழிக்காத. நான் செத்தா கூட நீ வரக்கூடாது என்று கோபியை தல முழுகி தொப்புள் கொடி உறவே தூக்கி எறிந்து கோபியை வெளியே போக சொல்லிவிட்டார்.

இவ்வளவு தூரம் ஈஸ்வரி பேசியதற்கு திருப்பி எதுவும் பேச முடியாமல் கோபி அப்படியே நிலைகுலைந்து வாசலில் போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார். பிறகு ராதிகா வீட்டிற்கு போகிறார். அங்கே கதவைத் தட்டிய நிலையில் ராதிகா, அவருடைய அம்மாவை போய் கதவை திறந்து விடு என்று சொல்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா, சும்மாவே ஆடுவாரு இப்ப காலில் சலங்கை வரை கட்டி விட்டுட்டம் என்ன கூத்து பண்ண போகிறாரோ என்ற பயத்திலேயே கதவு திறக்கிறார்.

ஆனால் கோபி உள்ளே நுழைந்ததும் எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து அப்படியே அழ ஆரம்பித்து விட்டார். கோபிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ராதிகா முயற்சி எடுக்கிறார். ராதிகாவிற்கு குற்ற உணர்ச்சி இருப்பதால் கொஞ்சம் அடங்கி போயி கோபியை சமாதானப்படுத்த நினைக்கிறார்.

ஆனால் கோபி ஆவேசமாக பொங்கவில்லை என்றாலும் எல்லாமே முடிந்து போய்விட்டது என்ற மனப்பக்குவத்துக்கு வந்து ஒண்ணுமே பண்ண முடியாது என்ற நிலையில் நிலைகுலைந்து போய் நிற்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News