புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபியை நம்பின பாவத்துக்கு ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை.. தாத்தா அடிச்ச அடி ராதிகாவுக்கு விழப்போகும் சவுக்கடி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யா குடும்பத்தை பழிவாங்கவும், கோபியை அசிங்கப்படுத்தவும் ராதிகாவின் அம்மா ஈஸ்வரி மீது பொய்யான வழக்கை கொடுத்து கைதி பண்ண புகார் கொடுத்து விட்டார். அதன்படி பாக்யாவுக்கு விஷயம் தெரிந்த உடன் மாமியார், மாமனார் அனைவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

இதற்கு இடையில் பாட்டியை எப்படியாவது இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எழில் மற்றும் செழியன் லாயரிடம் பேசுகிறார்கள். ஆனால் இது கொலை முயற்சி, சிசுக்கொலை என்பதால் முன் ஜாமின் கூட வாங்க முடியாது. எதுவானாலும் கோர்ட்டில் தான் நாம் இதை பார்க்க முடியும் என்று லாயர் சொல்லிவிட்டார்.

தலையில் அடித்து புலம்பும் ஈஸ்வரி

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பாட்டியை நினைத்து ரொம்பவே கதி கலங்கி நிற்கிறார்கள். பிறகு வீட்டிற்குள் நுழைந்த ஈஸ்வரி வழக்கம்போல் சந்தோஷமாக அனைவரிடமும் பேசி நேரத்தை செலவழிக்கிறார். பாட்டி இருக்கும் சந்தோஷத்தை பார்த்து எழில் செழியன் எப்படி இவர்களிடம் உண்மையை சொல்ல முடியும் என்று தவித்து போய் நிற்கிறார்கள்.

அதிலும் பாக்கியா இதை எப்படி சரி செய்ய முடியும் என்ற ஒரு கேள்விக்குறியில் இருக்கிறார். இதற்கு இடையில் பாக்கியா வீட்டில் என்ன இன்னும் பூகம்பத்தை காணும் என்று ராதிகாவின் அம்மா வாசலில் நின்னு பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ராதிகா ஏன் வெளியிலேயே நிற்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு போலீஸ் வந்து ஈஸ்வரியை கூட்டிட்டு போகும் பொது மொத்த குடும்பமும் துடிப்பதை கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று வக்கிர புத்தியுடன் பேசுகிறார்.

அதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் ராதிகாவும் அமைதியாக நிற்கிறார். இது எதுவும் தெரியாத கோபி வழக்கம்போல் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வருகிறார். ஆனால் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை ராதிகாவும், ராதிகாவின் அம்மாவும் கோபியிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். அடுத்ததாக ஈஸ்வரி வீட்டிற்கு வந்து விட்டார்கள் என்று தெரிந்த நிலையில் போலீசார் பாக்யா வீட்டிற்கு போகிறார்கள்.

போனதும் இங்கு யார் ஈஸ்வரி என்று சொல்லி கொடுத்த கம்ப்ளைன்ட் படி அவரை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள். இதை பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் போலீஸிடம் ஈஸ்வரி எந்த தப்பும் பண்ணவில்லை என்று கெஞ்சுகிறார்கள். ஆனால் ஈஸ்வரியை கூட்டிட்டு போய் காரில் ஏற்றி விடுகிறார்கள். இது எதுவும் புரியாத ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு புலம்பி தவிக்கிறார்.

அங்கே வந்த கோபி என்ன போலீஸ் ஜீப் வந்துட்டு போகுது என்று கேட்கிறார். அதற்கு தாத்தா, உன்னால தான் எல்லாத்துக்கும் காரணம். எப்படி இருந்த ஈஸ்வரியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே என்று கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்கிறார். அதன் பிறகு தான் ராதிகா மற்றும் அவருடைய அம்மா செய்த சதி கோபிக்கு தெரிய வருகிறது. அதே கோபத்துடன் ராதிகாவிடம் சண்டை போடுவதற்கு கோபி போகிறார்.

ஆனால் ராதிகாவும், ராதிகாவின் அம்மாவும் சேர்ந்து கோபியை உதாசீனப்படுத்திவிட்டு கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் பாக்கியா எப்படி சட்டப்படி அத்தையே வெளியே கொண்டு வரலாம் என்று முயற்சி எடுக்கிறார். கூடவே பாக்யாவிற்கு உதவியாக பழனிச்சாமி அனைத்து வேலைகளையும் பண்ண போகிறார்.

கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு வேற பொண்ணு மேல ஆசைப்பட்டு போனால் மொத்த குடும்பமும் இப்படித்தான் அவமானப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் என்பதற்கு உதாரணம் கோபியை சொல்லலாம். ராதிகாவை நம்பியதற்கு கோபிக்கு இந்த அவமானம் தேவை, கோபியை நம்பின பாவத்துக்கு ஈஸ்வரிக்கு இது மிகப்பெரிய தண்டனையாக அமைந்துவிட்டது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News