புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபிக்கு ஆப்பு வைக்கப் போகும் ஈஸ்வரி.. பாக்யாவை நினைத்து மாமியாராக எடுக்கப் போக நல்ல முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி அழுது புலம்பி என் மகன் கோபி என்னை தப்பா நினைத்து விட்டானே என்று வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார். இதை தாத்தா மற்றும் இனியா பார்த்து ஆறுதல் சொல்கிறார்கள். ஆனாலும் ஈஸ்வரிக்கு கோபி சொல்லியது நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்.

அடுத்து பாக்கியா, ராதிகா வீட்டிற்கு போய் பேசிட்டு வருகிறேன் என்ற கிளம்புகிறார். ஆனால் அங்கே போன பாக்கியாவிற்கு ராதிகா அம்மா அசிங்கப்படுத்துகிறார். இருந்தாலும் பாக்யா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ராதிகாவிடம் உடம்பு எப்படி இருக்கிறது.? இது ரொம்பவே கஷ்டமான விஷயம் தான் ஆனால் எதை நினைத்தும் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லுகிறார்.

ரெண்டு பக்கமும் அடி வாங்கிட்டு நிற்கும் கோபி

ஆனால் ராதிகா, நான் வந்து உங்க கிட்ட கஷ்டமாக இருக்குன்னு சொன்னேனா. ஏன் தேவை இல்லாமல் என் வீட்டுக்கு வந்து என்ன டார்ச்சர் பண்ணுகிறீர்கள். உங்களை மாதிரி ஒரு நல்லவள் மாதிரி என்னால் வேஷம் போட முடியாது. தயவு செய்து இங்கே வந்து என்னை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று பாக்கியாவிடம் ராதிகா கோவப்பட்டு பேசுகிறார்.

அடுத்து வெளியே வந்த பாக்கியா கோபியை பார்த்ததும், நீங்க செஞ்சது பெரிய தப்பு. உங்களை நம்பி வந்த உங்க அம்மாவை எப்படி தவறாக புரிந்து வெளியே அனுப்பினீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி நான் எதுவுமே பண்ணல என்று சாதாரணமாக சொல்கிறார். ஆனால் பாக்கியா நீங்களும் சேர்ந்துதான் சொல்லி இருக்கீங்க. அதனால்தான் அத்தையால் அதை தாங்க முடியாமல் அழுது எப்படி இருக்காங்க என்று கூட உங்களால புரிஞ்சுக்க முடியல.

நான் அவங்கள புரிஞ்சுகிட்ட அளவுக்கு கூட நீங்க புரிஞ்சுக்கலைன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நீங்க என்ன தப்பு பண்ணினாலும் உங்களுக்கு சப்போர்ட்டாக நின்னவர் உங்க அம்மா. அவங்கள போய் இந்த அளவுக்கு காயப்படுத்தி வெளியே அனுப்பி விட்டீர்களே என்று நியாயம் கேட்டு பாக்கியா கிளம்பி விடுகிறார். இதற்கிடையில் ராதிகாவை சமாதானப்படுத்த போன கோபியிடம் ராதிகா கோவப்பட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

வெளியே வந்து இருந்த கோபி மனக்கஷ்டத்தில் இருக்கும் பொழுது ராதிகா அம்மா வந்து சண்டை போட்டு போகிறார். இப்படி இரண்டு பக்கமும் இடிபட்டு நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் கோபி. இதனை அடுத்து அத்தையின் மனநிலை மாற்ற வேண்டும் என்பதற்காக பாக்கியா வெளிய கூட்டிட்டு போகலாம் என்று நினைக்கிறார். இப்படி ஈஸ்வரியை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு பாக்கியா மாற்றி கொண்டு வருவார்.

அதன் பின் முதன்முறையாக பாக்யாவின் தனிமையை நினைத்து ஈஸ்வரி ஒரு முடிவு எடுக்கப் போகிறார். அதாவது இப்பொழுது என்னதான் பிள்ளைகள் என்று பாக்கியா இருந்தாலும் கடைசி காலத்தில் பிள்ளைகள் வேறு விதமாக மாறினால் பாக்யாவின் நிலைமை கேள்விக்குறியாக இருக்கும். அதனால் அவருக்கு ஒரு துணை வேண்டும் என்று ஈஸ்வரி பாக்கியாவிற்கு மறு திருமணம் பண்ணலாம் என்று முடிவு எடுக்கப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News