வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோபிக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுக்கும் ஈஸ்வரி.. நொடிந்து போன பாக்கியா, ஆறுதல் சொல்லும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தா மயக்கத்தில் இருக்கிறார் என்று செழியன் டாக்டரை கையோடு கூட்டிட்டு வருகிறார். ஆனால் அதற்கு முன்னதாக செல்வி அக்கா, தாத்தா நம்மளை விட்டு போய்விட்டார் என்று கூறினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதன் பின் டாக்டர் வந்தும் அவர் தூக்கத்திலேயே மரணம் முடிந்து போய்விட்டது என்று சொல்லி அனைவருக்கும் வேதனை கொடுத்துவிட்டார்.

இதனால் ஆளுக்கு ஒரு பக்கம் தாத்தாவை நினைத்து அழ ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பாக்கியாவால் என்ன செய்வது என்று தெரியாமல் நொடிந்து போய் ஒரே இடத்தில் நின்று மாமனாரை எண்ணி அழுகிறார். யார் என்ன சொன்னாலும் பாக்யாவிற்கு கடைசிவரை சப்போட்டாக இருந்தது மாமனார் மட்டும்தான். அப்படிப்பட்டவர் தற்போது நம்முடன் இல்லை என்று நினைக்கும் போது பாக்யாவிற்கு அழுகை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கோபி தலையில் இடியை இறக்கும் விதமாக ஈஸ்வரி கொடுத்த தண்டனை

பிறகு பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி தாத்தாவின் மரணத்திற்கு வந்து நிற்கிறார்கள். ஆனால் இது எதுவும் தெரியாத கோபி வழக்கம்போல் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு போகிறார். அப்படி போகும் பொழுது எதற்கு பாக்யா வீட்டில் எல்லோரும் கூட்டமாக நிற்கிறார்கள் என்று மெது மெதுவாக போய் பார்க்கிறார்.

அப்படி போனவருக்கு அங்கே மிகப்பெரிய அதிர்ச்சியாக அப்பாவின் இறப்பு தொண்டையை அடைத்து விட்டது. பிறகு ராதிகா மற்றும் மயூவை கூட்டிட்டு வந்து அனைவரும் தாத்தா பக்கத்தில் இருந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஈஸ்வரி மட்டும் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளாமல் வாய் அடைத்து போய் கணவர் பக்கத்திலேயே இருந்து பார்க்கிறார்.

பிறகு மாமியாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ராதிகா போய் பேசுகிறார். இன்னொரு பக்கம் கோபி இடிந்து போய் நிற்கும் நிலையில் ராதிகா ஆறுதல் படுத்துகிறார். ஆனால் இன்னும் இவ்வளவு நேரம் ஆகியும் எழில் மட்டும் வரவில்லை. இதனை தொடர்ந்து எழிலுக்கு தகவலை சொல்லும் விதமாக செழியன் போன் பண்ணி கூப்பிடுகிறார்.

அடுத்ததாக செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் செய்யலாம் என்று உறவினர்கள் சொல்ல வரும் பொழுது கோபி அதற்கு தயாராக நிற்கிறார். ஆனால் ஈஸ்வரி, என் கணவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் கோபி எந்த காரியமும் செய்யக்கூடாது என்று மிகப்பெரிய தண்டனையை கொடுக்கும் விதமாக கோபி தலையில் இடியை இறக்குகிறார்.

கோபி எவ்வளவு கெஞ்சியும் ஈஸ்வரி மனம் இறங்காமல் செழியன் மற்றும் எழிலை வைத்து அடுத்தடுத்து எல்லா காரியத்தையும் செய்ய சொல்ல போகிறார். இதனை தொடர்ந்து தாத்தாவின் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு அந்த வீடு ஒட்டுமொத்தமாக கலக்கத்தில் இருக்க போகிறார்கள். அப்பொழுது அனைவருக்கும் ஆறுதலாகவும் சப்போர்ட்டாகவும் ராதிகா ஒவ்வொருவையும் பார்த்துக் கொள்ளப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News