செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆண்டியானாலும் பரவாயில்லை, அரசியலுக்கு மட்டும் போய்டாதீங்க.. அப்பாவின் சத்தியத்தை காப்பாற்றி வரும் ஜெயிலர் பட நரசிம்மன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரூப், தமன்னா, யோகிபாபு, மோகன்லால், வசந்த் ரவி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் பெருமளவில் பேசப்பட்ட நிலையில், கன்னட நடிகரான சிவராஜ்குமாரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இப்படத்தில் நரசிம்மன் என்ற இவரது கதாபாத்திரத்தில் நடித்த சிவராஜ்குமாருக்கு இதுதான் முதல் படமாகும். ஆனால் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று கோடான கோடி ரசிகர்களின் உள்ளத்தில் சிவாண்ணாவாக வளம் வருகிறார்.

Also Read: ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

மேலும் இவரது குடும்பம் நினைத்தால் இன்னைக்கு முடிவெடுத்து, நாளைக்கே கூட கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்க முடியும். அதுமட்டுமல்ல இவரும், இவருடைய குடும்பமும் யாருக்கு ஆதரவாக உள்ளார்களோ அவர்களே கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்பார்கள். அந்த அளவுக்கு பேர், புகழ், செல்வாக்கு உள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமே அரசியலில் இதுவரை கால் பாதிக்காமல் உள்ளது தான் பெரும் ஆச்சரியமாகும்.

இதற்கான காரணம், சிவராஜ்குமாரின் தந்தை பிரபல கன்னட நடிகரான மறைந்த ராஜ்குமார் அவர்கள் வாங்கிய சத்தியம்தானாம். கடந்த 2000 ஆம் ஆண்டு மறைந்த சந்தன கடத்தல் கும்பலை சேர்ந்த வீரப்பன் ராஜ்குமாரை கிட்டத்தட்ட 108 நாட்கள் காட்டில் கடத்தி வைத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போலீசுக்கு தண்ணிகாட்டி வந்தார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட ராஜ்குமார், வீடு திரும்பிய நிலையில் தனது மொத்த குடும்பத்தையும் அழைத்து ஒரு சத்தியம் வாங்கியுள்ளார்.

Also Read: 9வது நாளில் மந்தமான ஜெயிலர் வசூல்.. 500 கோடியை நெருங்க தடுமாறும் டைகர் முத்துவேல் பாண்டியன்

அதாவது நீங்கள் சினிமாவில் மட்டுமல்ல, எதில் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாதியுங்கள். ஆனால் அரசியல் பக்கம் மட்டும் தலைவிரித்துக்கூட படுக்காதீர்கள். என் குடும்பத்தை சேர்ந்த யாரும் அரசியலில் நுழைய கூடாது, எந்த பதவி கொடுத்தாலும் வாங்கக்கூடாது என சத்தியம் வாங்கிவிட்டாராம். ராஜ்குமாருக்கு மொத்தம் 5 பிள்ளைகள் உள்ள நிலையில், முதலாவது மகன் தான் நடிகர் சிவராஜ்குமார்.

இதனிடையே அப்பா வாங்கிய சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இவர் தான் வழிநடத்தி வருகிறார். தற்போது சிவராஜ்குமார் ஜெயிலர் படம் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளாத ஜெயிலர் 5 பிரபலங்கள்.. கிழித்து தொங்க விட்ட பயில்வான்

Trending News