திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நம்பர் ஒன் இடத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. விஜய் ரஜினியிடம் கற்றுக்கொள்ளவேண்டிய அந்த ஒரு பழக்கம்.!

தமிழ் சினிமாவில் தற்போது யார் நம்பர் 1 என்ற பேச்சு முக்கியமானதாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் அண்டை மாநிலத்தில் இருந்து வந்த ஒரு தயாரிப்பாளர் தன் படத்திற்கு பிசினஸ் நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜய்தான் நம்பர் 1 தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை என்று பயமில்லாமல் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால் இன்று வரை தமிழ்நாட்டில் அந்த பேச்சு சாதாரணமாக வந்து செல்லும் அது அப்படியே மறைந்து விடும் ஆனால் தற்பொழுது மிகப் பெரிய பிரச்சினையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்து 30 வருடமாகவே பல நடிகர்கள் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வந்தார்கள் அதில் நிலைத்து நிற்பவர்கள் ரஜினியும், கமலும் மட்டுமே. காரணம் வெறும் படத்தின் வெற்றியை வைத்து மட்டுமே இந்த நம்பர் 1 இடம் மக்கள் கொடுப்பது இல்லை.

Also Read : சுய லாபத்திற்காக விஜய் கூட்டிய கூட்டம்.. தனி பாதையை உருவாக்கும் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க

மனிதாபிமானம் அடிப்படையில் அமையும் எடுத்துக்காட்டாக 90களில் நடிகர்களை சினிமாவில் போட்டோகிராபர்கள் நடிகர்களை போட்டோ எடுத்து அதை நல்ல விலைக்கு பத்திரிகையில் விற்றுவிடுவார்கள். அந்த அந்தவகையில் சினிமாவில் உள்ள போட்டோகிராபர் ஒருவர் ஸ்டூடியோ ஸ்டுடியோ வாக சுற்றி ரஜினியை போட்டோ எடுத்து விற்று வந்தார். ரஜினியும் இவருக்கு முடிந்த அளவு போட்டோவுக்கு போஸ்களை கொடுப்பார்.

இதனை அறிந்து போட்டோ கிராபர்கள் அனைவரும் ரஜினியிடம் சென்று போட்டோ எடுக்க செல்வார்கள் அப்போது ரஜினி யாரையும் அனுமதிக்காமல் முக்கியமான ஒரு போட்டோகிராபரை மட்டும் அனுமதித்து எடுக்கச் சொல்வார். இதற்கு காரணம் மற்ற போட்டோகிராபர்கள் டைம்பாஸ் மற்றும் வேறு வேலை செய்துவிட்டு இதை ஒரு எக்ஸ்ட்ரா வருமானமாக செய்து வருகிறார்கள் ஆனால் நீங்கள் மட்டும் இதை ஒரு தொழிலாக இதை நம்பி இந்த தொழில் செய்து வருகிறார்கள். அதனால் நீங்கள் தனியாக வந்து என்னிடம் கேளுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். என்னை வைத்து உங்கள் தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Also Read : வீடு தேடி வந்த நடிகை.. வாரி கொடுத்து காப்பாற்றிய ரஜினிகாந்த்

இதுபோல் அஜித்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் அவரை மிகவும் கேவலமான முறையில் அவரை பற்றி பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் அவரை கேட்காமலே அவருக்கு இருதய சிகிச்சைக்கு பல லட்சம் செலவில் அவரே ஏற்றுக் கொண்டு உதவி செய்தார். மற்றும் குடும்பத்திற்கு இருதய அறுவை சிகிச்சை செய்தால் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் ஆறுமாதத்திற்கு மளிகை பொருட்களும், மற்றும் 6 மாதத்திற்கான செலவுகளையும் வீடு தேடி சென்று அவர் மனைவியிடம் கேட்காமலேயே கொடுத்தார் அஜித்.

இது மாதிரி நிறைய ஹீரோக்கள் தங்களது மனிதாபிமான அடிப்படையில் பத்திரிக்கையாளர்களும் இருந்தாலும் சரி ரசிகர்களாக இருந்தாலும் சரி கேட்காமலே உதவி செய்து வந்தார்கள். ஆனால் தற்போது வரை விஜய் இந்த மாதிரி ஒரு உதவியும் செய்ததில்லை யாருக்காகவும் பேசியதும் இல்லை அவர் உண்டு, அவர் வேலை உண்டு, சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்து வருகிறார் இப்பொழுது இவர்தான் நம்பர்-1 என்றால் இதுவரை மனிதாபிமான அடிப்படையிலும் சரி வெற்றியிலும் சரி நம்பர் 1 ஆக இருந்த நடிகர்கள் நம்பர் ஒன் இல்லையா இதை புரிந்து கொண்டு விஜய் நடந்து கொண்டால் அவரும் நம்பர் 1 இதை அண்டை மாநிலத்தில் இருந்து வந்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்று பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.

Also Read : அஜித்தை பொருட்டாகவே மதிக்காத விஜய்யின் பேச்சு.. அமைதியாக கொடுக்கும் பதிலடி இதுதான்

Trending News