செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரூமுக்கு ஏத்த மாதிரி பிள்ளையை பெத்துக்கணும்.. முத்துவின் குடும்பத்திற்குள் கலங்கத்தை ஏற்படுத்திய ஸ்ருதியின் அம்மா

Siragadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களிலேயே முதல் இடத்தை பிடித்திருப்பது சிறகடிக்கும் ஆசை சீரியல் தான். அதற்கு காரணம் முத்து மீனாவின் எதார்த்தமான நடிப்பும், நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை வைத்து கதை நகர்ந்து வருகிறது. அதே மாதிரி மூன்று பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் ஒரு பிள்ளையை மட்டும் மரியாதை இல்லாமல் நடத்தும் அம்மாவின் கேரக்டரையும் மையப்படுத்தி வருகிறது.

அதற்கு ஏற்ற மாதிரி வந்த மருமகள்களும் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் இரண்டு மருமகள்களை மட்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார் மாமியார். எந்த அளவிற்கு விஜயா, முத்துவை ஓரவஞ்சனையாக பார்க்கிறாரோ, அதே மாதிரி ஏழை வீட்டில் இருந்து வந்த மீனாவையும் கொத்தடிமையாக நடத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் ஒவ்வொன்றையும் பார்த்து பக்குவமாக செய்து வருகிறார் மாமியார்.

இதனை தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதிக்கு தங்குவதற்கு ரூம் கிடைக்கவில்லை என்று தவறாக புரிந்து கொண்ட ஸ்ருதியின் அம்மா நேரடியாக முத்து விட்டிற்கு வந்து சண்டை போடுகிறார். அது மட்டும் இல்லாமல் முத்துவின் அப்பாவையும் தரை குறைவாக பேசும்படி குத்தி காமிக்கிறார். அத்துடன் ரெண்டு ரூம் மட்டும் இருக்கு என்றால் அதற்கேற்ற மாதிரி இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெத்துக்க வேண்டியது தானே.

Also read: குணசேகரனின் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்த எக்ஸ் காதலி.. எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும் எதிர்நீச்சல்

உங்களுக்கெல்லாம் எதுக்கு மூன்றாவது பிள்ளை என்று கொச்சையான வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்துகிறார் சுருதியின் அம்மா. இதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்து அதற்கு தாறுமாறாக பதிலளிக்கும் விதமாக எதிர்த்து பேசி விடுகிறார். அதன் பின் வீட்டிற்குள் வந்த முத்துவின் அப்பா எல்லாத்தையும் சமாதானப்படுத்தி நடந்த விஷயத்தை விளக்கப்படுத்தி கூறுகிறார்.

ஆனாலும் முத்து பேசியது தவறுதான் என்று இவருடைய அப்பா ஸ்ருதியின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். அதற்கு முத்து என் மீது தவறை இல்லை, அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். பிறகு ஸ்ருதி அவங்க அம்மாவை சமாதானப்படுத்துவதற்கு தனியாக பேச கூட்டு போய் விடுகிறார்.

இதற்கிடையில் பஞ்சாயத்து நடக்கும் பொழுது முத்துவை அனைவரும் காட்டுமிராண்டி, ரவுடி என்று தகாத வார்த்தையை சொல்லி திட்டியதால் மீனாவின் மனது ரொம்பவே காயப்பட்டு விட்டது. மேலும் முத்து மீனாவை பிரித்தே ஆக வேண்டும் என்று நோக்கத்தில் ஸ்ருதி மற்றும் ரோகிணி பிளான் பண்ணி இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி இந்த கூட்டணியில் தற்போது ஸ்ருதியின் அம்மாவும் சேரப் போகிறார்.

Also read: செந்தில் மீனா சந்தோஷத்திற்கு தடையாக இருக்கும் பாண்டியன்.. அல்ப விஷயத்துக்கு கணக்கு பார்க்கும் மாமனார்

Trending News