புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மோகன் பாபுவை காப்பாற்றிய ரஜினி.. பெத்தராயுடு படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம்

தெலுங்கு சினிமா மூத்த நடிகர் மோகன் பாபு, இவருக்கு ரஜினி பல லட்சம் பணம் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்பாபு பிரபல யூடியூப்க்கு பேட்டியளித்தார். அதில், 1982 ல் லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அம்மாவின் பெயரில் தொடங்கினேன்.

என்.டி.ஆர் சென்னைக்கு வந்து அதைத் தொடங்கி வைத்தார், அதன் மூலம் 1995 வரை வெற்றியும், தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தது.

அதே ஆண்டு பெத்தராயுடு படம் தயாரித்தேன். ஜூன் 15 ல் ரிலீசானது. அப்படம் பெரிய ஹிட்டு. அதற்கு முன், தமிழில் நாட்டாமை படத்தை பார்த்த ரஜினி என்னை அழைத்து, இப்படம் இங்க ஹிட்டாச்சு.

நீயும் இதைப் பார் பிடித்தது என்றால், அதன் உரிமையை வாங்க நான் சொல்லுகிறேன். சொன்னபடியே, ஆர்.பி.செளத்ரியிடம் அப்பட உரிமையை வாங்கிக் கொடுத்தார்.

பட ரைட்ஸை குறைந்த விலைக்கு வாங்கி கொடுத்து, பணமும் கொடுத்த ரஜினி!

அந்த உரிமையை அவரிடம் வாங்கும் போது, அவர், ரஜினி சொன்னதால் தான் குறைந்த ரேட்டுக்கு தருகிறேன் என்றார்.

அதன்பின், அப்படத்தை, இயக்குனர் ரவி ராஜாவை அழைத்து படம் பார்த்தபோது, டவுட்டாக இருக்கிறது என்றார். அவர் சொல்வதை கேட்டு எனக்கு கோபம்.

ரஜினியும், நானும் பார்த்துவிட்டோம். இவர் ஏன் இப்படி சொல்லுகிறார் என்று அடுத்த நாளே என்னிடம் வந்து பெத்தராயுடு படத்தை இயக்க சம்மதம் கூறினார்.

ரஜினி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறுகிறார், அவரே சொந்த காசில் போட்டோ ஷூட்டும் எடுத்து அனுப்பியுள்ளார் என்று சொல்வதைக் கேட்டு மேலும் ஆச்சர்யப்பட்டார் ரவி ராஜா.

அந்தப் படம் எடுத்தபோது, நான் கஷ்டத்தில் இருந்தேன். என் நிலைமை அறிந்து ரஜினி 45 லட்சம் பணம் கொடுத்து, படம் வெற்றியடைந்த பின் கொடு என்றார்.

படம் ரிலீசாகி சூப்பர் ஹிட்டு, உறவுகளைப் பற்றிப் பேசும் குடும்ப செண்டிமெண்ட் படம். அந்த படம் மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது.

அதுக்கு காரணம் என் நண்பன் ரஜினி, என்ன மனுஷன் என்று ரஜினியை மோகன் பாபு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Trending News