Thalapathi 68: விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பல எதிர்பார்ப்புகளை முன்வைக்கும் இவரின் அடுத்த படம் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு இருக்க, ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்னது தப்பா போச்சு என நினைக்கும் அளவிற்கு அரங்கேறும் சம்பவம் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த படம் தான் கஸ்டடி. இப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவிடம், விஜய் இவரின் ஒன்லைன் ஸ்டோரிக்கு சம்மதம் தெரிவித்தார். அதை தொடர்ந்து இப்படம் தளபதியின் 68 என பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து வந்தது.
Also Read: ஹீரோயின் மீது கிரஸ்சாகி தூக்கத்தை தொலைத்த ராஜ்கிரண்.. அம்மாவிடமே சிபாரிசுக்கு சென்ற மாயாண்டி
அவ்வாறு இருக்க தன் படத்திற்கு விஜய் ஒத்துக்கொள்வார் என்று இன்று வரை எதிர்பார்க்கவில்லை என கூறிவரும் இவர் சம்மதம் வாங்கினாரே தவிர, இன்னும் கதைக்காண பிடிப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஹோட்டல் அறைக்குள்ளே தன் குழுவுடன் கதை விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்பொழுது வேறு மொழி படங்களை ஏன் ரீமேக் உரிமையை பெற்று அதில் விஜய்யை நடிக்க வைக்க கூடாது என்ற முயற்சியினும் பேசி வருகிறார் வெங்கட் பிரபு.
Also Read: பிக் பாஸ் கோடி கோடியாய் கொட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்ல.. கேபிஒய் தீனா செய்யப் போகும் தரமான சம்பவம்
மேலும் இப்படம் ஜூலை 15 தேதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் நடப்பது அறியாது விஜய் இருக்கும் நிலையில், தற்பொழுது கதை தேடி பல திட்டங்களை தீட்டி வருகிறார் வெங்கட் பிரபு.
இதைப் பார்க்கையில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் கதை இல்லாத காரணத்தால் அஜித்தால் துரத்தியடிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இவரின் கதை என்னவாகும் என்பது தெரியாது மரண பயத்தில் இருந்து வருகிறார் வெங்கட் பிரபு.
Also Read: லியோவில் அர்ஜுனால் ஏற்பட்ட குழப்பம்.. பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு முழித்த லோகேஷ்