வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அந்தப் படத்திற்குப் பின் தான் வடிவேலு மக்கா மாறிட்டாரு.. கழுவி ஊற்றிய இயக்குனர்

வைகைப்புயல் வடிவேலுக்கு இணையான ஒரு காமெடி நடிகர் தற்போது வரை உருவாகவில்லை. கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஆட்சி செய்தாலும் அதன் பின்பு வந்த வடிவேலு தனது உடல் மொழியிலும் நகைச்சுவையை காட்டி இருப்பார். இதுவே அவரது காமெடிக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது.

மேலும் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு ரெட் கார்ட் தடை போடப்பட்டது. சமீபத்தில் ரெட் கார்ட் தடை நீங்கிய பின்பு படங்களில் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தோல்வியை சந்தித்தது.

Also Read : வடிவேலு மாதிரி நடிக்க ஆசைப்பட்ட மயில்சாமி.. உதவாமல் போன திரை பிரபலங்கள்

இப்போது மாமனிதன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுவை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மற்றும் இயக்குனரான மாரிமுத்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாரிமுத்து.

இந்த தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவரது பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது தனது வாழ்க்கையில் சந்தித்த சினிமா பிரபலங்கள் பற்றி மாரிமுத்து கூறுகிறார். அந்த வகையில் வடிவேலுவை பற்றி மாரிமுத்து பேசியிருந்தார்.

Also Read : முருங்க மரத்திலேயே குடி கொண்ட வேதாளம்.. வடிவேலுவால் செம கடுப்பில் இருக்கும் சந்திரமுகி-2 படக்குழு

அதாவது வடிவேலு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். அவர் சில காலம் சினிமாவில் இல்லை என்றாலும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அவரது காமெடியை பயன்படுத்தி மக்கள் மனதில் நிலை நிறுத்தி விட்டனர். ஆனால் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்கும் அளவுக்கு மக்காக மாறிவிட்டார்.

நானும் வடிவேலுவிடம் ஒரு கதையை கூறினேன். ஒரு வயதான பாட்டி மற்றும் வடிவேலுக்கு இடையான கதை தான். பாட்டி பேரன் இடையே இருக்கும் நகைச்சுவை வெளிப்படுத்தும் வகையான கதை அது. ஆனால் கடைசியில் சம்பள பிரச்சனையினால் அந்த படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்று மாரிமுத்து கூறியுள்ளார்.

Also Read : வடிவேலு உதறி தள்ளிய படத்தில் ஹீரோவான விஜய்.. தளபதியின் கேரியரையே தலைகீழ புரட்டிப் போட்ட படம்

Trending News