சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அவமானத்தை மறக்காத விஜய்.. தினமும் கண்முன் பார்த்து ஜெயிக்கணும்னு வெறி

Actor Vijay: விஜய் சினிமாவில் இன்று எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். பொதுவாக வாரிசு நடிகர் என்பதால் இவர் சினிமாவில் ஜெயித்து விட்டார் என்ற பேச்சுக்கள் வரக்கூடும். ஆனால் வாரிசு நடிகர்களாக வந்தும் சினிமாவில் தோற்ற பலர் இருக்கிறார்கள். வாய்ப்பு வேண்டுமானால் எளிதில் கிடைத்து விடலாம் ஆனால் ஜெயிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக திறமை மற்றும் உழைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் தளபதி விஜய் சினிமாவுக்கு வந்த புதிதில் அவரது தந்தை எஸ்ஏசி இதெல்லாம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் மீறி தான் விஜய் சினிமாவுக்கு வந்தார். அவர் நடித்த படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது.

Also Read : ரஜினிக்கு பரிந்து கொண்டு விஜய்யை வாரிவிடும் பிரபலம்.. 100 கோடி சம்பளம் தொட இதுதான் காரணம்

இந்த சூழலில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் விஜய்யை கேலி, கிண்டல் செய்யும் விதமாக எழுதி இருந்தனர். இதை பார்த்த விஜய் மிகவும் வேதனையுடன் அழுது கொண்டே இருந்திருக்கிறார். அந்த இடம் தான் அவருக்கு ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதாவது அந்த பத்திரிக்கையில் விஜய் குறித்து வந்த செய்தியை பிரேம் செய்து தனது வீட்டில் மாற்றி இருக்கிறார்.

தினமும் காலை எழுந்தவுடன் தனது கண்ணில் படுமாறு அந்த போட்டோவை வைத்திருக்கிறார். தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இரவு, பகல் பாராமல் தனது கடின உழைப்பை போட்டு அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

Also Read : சர்ச்சைகளால் கழட்டி விட்ட விஜய்.. ஹிட் பட இயக்குனர், இப்போ டம்மியாய் சுற்றும் பரிதாபம்

ஒரு காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக விஜய் மாறிவிட்டார். அதன் பிறகு அதே நாளிதழில் விஜய்யை பாராட்டி எழுதி இருந்தனர். இதுவே தளபதிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால் இப்போதும் அந்த புகைப்படம் விஜய்யின் வீட்டில் மாட்டி இருக்கிறதாம்.

இவ்வாறு விஜய் அவமானத்தை மறக்காமல் அதிலிருந்து ஒரு விஸ்வரூபம் வெற்றி பெற்றிருப்பது பலருக்கும் உத்வேகத்தை அளித்திருக்கிறது. இந்நிலையில் அவரின் லியோ படம் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்த சினிமாவும் காத்திருக்கிறது.

Also Read : ஒரே மெசேஜால் பதறிப் போன விஜய்.. அமெரிக்காவில் தளபதி எடுத்த சிகிச்சை

Trending News