வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மறுபடியும் ஏழரையை கூட்டிய முல்லையின் அம்மா.. கட்டன் ரைட்டா வெளியே போக சொன்ன கதிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. என்னதான் கதையை இல்லாமல் நகர்ந்தாலும் 1200 எபிசோடுகளை தாண்டி வருவது மிகப்பெரிய சாதனை தான். அத்துடன் கூட்டுக் குடும்பமாக இருக்கும் பொழுது அவர்களால் வருகிற பிரச்சினையை தாண்டி மற்றவர்கள் மூலம் ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்கு வரும் சிக்கல்கள் தான் அதிகமாக இருக்கும்.

அதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது இந்த சீரியல். என்னதான் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களை சுற்றி இருப்பவர்களால் தற்போது இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு தனித்தனியாக இருக்கிறார்கள். அதில் கதிர் மற்றும் மூர்த்தி இவர்கள் மட்டும் தற்போது ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். ஆனால் இதையும் கெடுக்கும் விதமாக முல்லையின் அம்மா தற்போது வேலைகள் பார்த்து வருகிறார்.

Also read: வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது. எனக்கு என்னுடைய மகளின் குழந்தை ரொம்பவே முக்கியம் அதனால் நீ உங்க அம்மா வீட்டுக்கே போய்விடு என்று சொல்கிறார். இதை கேட்டதும் தனத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த மூர்த்தி, தனம் உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க என்னன்னு சொல்லு என்கிட்ட அப்படி என்று கேட்கிறார். உடனே தனம் எதுவும் சொல்லாமல் நாம் இங்கு இருக்க வேண்டாம் என்னுடைய அம்மா வீட்டுக்கு கொஞ்ச நாள் போய் தங்கலாம் என்று கூறுகிறார். உடனே மூர்த்தி ஏன் திடீரென்று இப்படி சொல்கிறாய் என்னாச்சு யாரும் ஏதும் சொன்னாங்களா என்று கேட்கிறார்.

Also read: 15 மணி நேரம் கஷ்டப்பட்ட இயக்குனர்.. ரொமான்ஸ் காட்சியில் தூங்கி வழிந்த விஜய், த்ரிஷா

உடனே தனம் முல்லை அம்மா சொன்னதை சொல்கிறார். அதற்கு மூர்த்தியும் அப்படி என்றால் நாம் உங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கலாம் என்று சொல்லி கிளம்ப சொல்கிறார். இவர்களும் கிளம்புவதற்கு தயாராகி விட்டார்கள். இதை பார்த்த கதிர் முல்லை எங்கு கிளம்புறீங்க என்று கேட்க அதற்கு தனம் எந்த விஷயத்தையும் சொல்லாமல் நாங்கள் கொஞ்ச நாள் எங்க அம்மா வீட்டில் இருந்து வருகிறோம் என்று சொல்கிறார்.

உடனே முல்லை என் மேல சத்தியமா என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்று கேட்க இவருடைய அம்மா தனத்திடம் பேசி ஏழரையே கூட்டி இருக்கிறார் என்று தெரிந்த முல்லை, அம்மாவை வெளியே போக சொல்கிறார். அதற்கு அவர் தனத்தை பார்த்து என் பொண்ணுக்கு எனக்கும் சண்டையே இழுத்து விட்டுட்டியா என்று சொல்ல, உடனே கதிர் என் அண்ணியை ஏதாவது சொன்னீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். தயவுசெய்து நீங்க வெளியில போங்க என்று சொல்லிவிடுகிறார்.

Also read: 48 வருடங்கள், 350 படங்கள்.. 70 வயதிலும் நடிப்பை விடாத ரஜினி பட நடிகை

Trending News