செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இல்லத்தரசியான பாக்யா இப்போது தனது வாழ்க்கையில் தனக்குத் தேவையானதை தானே செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை பார்த்து ராதிகா பொறாமை படுகிறார்.

மேலும் கோபிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ராதிகா மீது எரிச்சல் வந்துள்ளது. இதனால் தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி இப்போது பாக்யாவின் புது பரிமாணம் கோபிக்கு பிடித்து போய் உள்ளது. தன்னுடைய வாழ்க்கை பறிபோகி விடுமோ என்ற பயத்தில் ராதிகா உள்ளார்.

Also read: இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

இந்த சூழலில் கோபியிடம் இருந்த இனியா தற்போது பாக்யா வசம் வந்துவிட்டார். மேலும் ராதிகாவிடத்திலிருந்து கோபியையும் பிரித்து விட வேண்டும் என ஈஸ்வரி தன்னுடன் கோபியை வந்து விடுமாறு கூறுகிறார். ஆனால் ராதிகாவை விட்டு பிரிய மனம் இல்லாத கோபி இங்கு வரமாட்டேன் என்று கூறுகிறார்.

ஆனால் ராதிகாவின் அம்மாவோ நீ இனிமேல் இந்த வீட்டில் இருக்க வேண்டாம், கோபி வீட்டிற்கு போ என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ராதிகா துணிச்சலாக ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது கோபி வீட்டிற்கு பெட்டி படிக்கை உடன் கிளம்பிவிட்டார். மேலும் கோபியிடம் இனிமேல் இங்கே தான் இருக்கப் போறோம் என்று கூறுகிறார்.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

இதனால் உச்சகட்ட பீதியில் உறைகிறார் கோபி. அதாவது ராதிகா வீட்டில் பாக்கியா பேச்சால் பல பிரச்சனைகள் நிலவியது. இப்போது பாக்கியா, ராதிகா இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் அவ்வளவுதான். சக்காளத்தி பிரச்சனை ஏற்பட்டு கோபியின் தலை உருள போவது கன்பார்ம்.

அதுமட்டுமின்றி அலுவகத்திலேயே ராதிகா பாக்கியாவிடம் செமையாக பல்பு வாங்குகிறார். இப்படி இருக்கையில் கோபி மட்டுமே இப்போது ராதிகாவுக்கு ஆதரவாக அந்த வீட்டில் உள்ளார். மற்றவர்களால் இனிமேல் ராதிகா என்ன பாடுபட போகிறார் என்பது போன்ற சுவாரஸ்யமான கதைக்களத்துடன் பாக்கியலட்சுமி தொடர் வரவிருக்கிறது.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

Trending News