திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என் பிள்ளைகளை படிக்க வைத்தது அந்த நடிகர் தான்..அதி குணசேகரனின் மறுபக்கம்

Actor Marimuthu: சின்னத்திரை சீரியலான எதிர்நீச்சல் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து, நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் முதல் நடிகர் கார்த்தி வரை தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் மாரிமுத்து ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த சமயத்தில் இவர் பிரபலமடைந்தார்.

இதற்கு முன்பாக இவர் கவிஞர் வைரமுத்துவுக்கு உதவியாளராகவும், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் உள்ளிட்ட பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக இருந்தவர். மேலும் 2 படங்கள் வரை தானே இயக்கியும் உள்ள நிலையில், பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதனிடையே நடிகர் மாரிமுத்துவை பற்றி யாரும் அறியாத மறுபக்கங்களும் தற்போது வெளியாகி வருகிறது.

Also Read: எதிர்நீச்சல் மாரிமுத்து நடிப்பில் ஜொலித்த 6 படங்கள்.. வருமன் வலதுகரமாக ஜெயிலரில் வந்த பன்னீர்

அதில் நடிகர் மாரிமுத்துவின் தம்பியான ரவிச்சந்திரன், அவரை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தேனீ மாவட்டத்தில் உள்ள வரசநாடு என்ற கிராமத்தில் பிறந்த மாரிமுத்து, சினிமாவில் சாதிக்க வேண்டுமென சென்னைக்கு அவரது தம்பியுடன் வந்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக பல கஷ்டங்களை சந்தித்து தற்போது தான் ராமபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வருவதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், நடிகர் மாரிமுத்து உதவி இயக்குனராக இருந்த காலத்தில் பல இயக்குனர்களுடன் வேலை செய்து வந்த நிலையில், யுத்தம் செய் திரைப்படத்தின் மூலமாக தான் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கிய நிலையில், மாரிமுத்துவை நடிக்க வைத்ததே மிஸ்கின் தான் என ரவிச்சந்திரன் கூறினார்.

Also Read: எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

அதுமட்டுமில்லாமல் மாரிமுத்துவின் பிள்ளைகளை படிக்க வைத்தது நடிகர் அஜித் என கூறி புது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளார். நடிகர் மாரிமுத்து இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான அஜித்தின் ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது அதே படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்துவுடன் பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். அப்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு உதவியாக மாரிமுத்து வாலி படத்தில் வேலை செய்துள்ளார்.

அப்போதிலிருந்தே நடிகர் அஜித்துக்கு பரிட்சையமான மாரிமுத்து, தனது பிள்ளைகளை படிக்க வைக்க கூட கஷ்டப்பட்டுள்ளார். அதையறிந்த அஜித், மாரிமுத்துவின் மகன் மற்றும் மகள் இருவரையும் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு அஜித் தான் செலவு செய்து படிக்க வைத்துள்ளாராம். தற்போது இந்த செய்தியை மாரிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரன் கூறியதையடுத்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

Also Read: இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

Trending News