சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் பாடல்கள் பாடிய ஸ்ருதிஹாசன், பின்பு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். அதிலும் பொங்கலுக்கு தெலுங்கில் ரிலீஸ் ஆன சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி போன்ற இரண்டு படங்களிலும் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின் ஆக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
வீர சிம்ஹா ரெட்டி படத்தில் மீனாட்சி என்ற கேரக்டரில் ஹனி ரோசும், ஜெய் சிம்ஹா ரெட்டி என்ற கேரக்டரில் பாலகிருஷ்ணாவும், ஈஷா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும் நடித்திருப்பார்கள். இதில் 37 வயது நடக்கும் தன் காதலி ஸ்ருதிஹாசனை 62 வயதான பாலய்யா தன்னுடைய 31 வயது தாயார் ஹனி ரோசிடம் அறிமுகப்படுத்தும் காட்சி பார்ப்பதற்கே கேலிக்கூத்தாக இருக்கிறது.
கொய்யால, எப்படி எல்லாம் படத்தின் கேரக்டரை வயது வித்தியாசம் இல்லாமல் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் அந்த காட்சி இடம் பெற்ற புகைப்படத்தை வைத்து கிழித்து தொங்க விடுகின்றனர்.
Also Read: போர் கொடி தூக்கும் 4 தெலுங்கு சினிமா குடும்பம்.. விஜய் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை
படத்தில் கதைக்கு வேண்டிய கேரக்டர் நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், அவர்களை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றி விடுவார்கள். இதுதான் சினிமா! என்று வீர சிம்ஹா ரெட்டி படத்தை வைத்து சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட விவாதங்கள் எழுகிறது.
அதிலும் பாலய்யாவிற்கு 31 வயது தாய் என்பது கொஞ்சம் ஓவர் இல்லையா! அதிலும் 62 வயதான நடிகருக்கு 37 வயது காதலி கேட்கிறதா, என்ன கருமம்டா இது! என்று வீர சிம்ஹா ரெட்டி படத்தை வைத்து நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.