புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிச்சைக்காரனாக அவர் நடித்தால் தான் கரெக்டா இருக்கும்.. நண்பனை புகழ்ந்து பேசிய விஜய் ஆண்டனி

தன்னை ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகராகவும் நிருபித்த விஜய் ஆண்டனி நடிப்பிலும் தன் திறமையை வெளிக்காட்டி வருகிறார். இவரின் பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வாறு இருப்பின் தற்பொழுது பிச்சைக்காரன் கதாபாத்திரத்திற்கு தன் நண்பன் கரெக்டா இருப்பான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு காலகட்டத்தில் பாடலே கெதி என இருந்த இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வாறு 2016ல் வந்த பிச்சைக்காரன் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இதனின் பாகம் 2 விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

Also Read: ஹிட்டு கொடுக்க வேற வழி தெரில குமாரு.. சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் விழுந்த விஜய் ஆண்டனி

இந்நிலையில் பிரஸ்மீட் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி இடம் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது உங்களை தவிர்த்து யார் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என கேட்டதற்கு உடனடி பதிலாக மகேஷ் பாபு என அவர் கூறியுள்ளார். மேலும் தமிழில் என்றால் அஜித்தும், விஜய்யும் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை தெரிவித்தார்.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் முகபாவனை, நடிப்பு இக்கதாபாத்திரத்திற்கு ஒத்துப் போகும் எனவும் கூறினார். மேலும் இவர் தன் நண்பன் என்பதாலும் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Also Read: பிச்சைக்காரன்-2 படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜோடி போட்ட கும்தா நாயகி.. ஒரு ஹிட் படத்தால் கொட்டும் பட வாய்ப்புகள்!

இது ஒரு புறம் இருக்க இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நட்பு இன்று வரை நீடித்து வருவதால் இத்தகைய ஆதரவை தெரிவித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இவர்களின் நட்பை தொடர்ந்து இது போன்ற முடிவு எடுத்து வரும் விஜய் ஆண்டனிக்கு இப்படம் நல்ல விமர்சனத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார். அதைத்தொடர்ந்து இப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பதாகவும் மேலும் மகேஷ்பாபு நடிக்க உள்ளதால் இருவரின் காம்பினேஷனில் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Also Read: வைரலாகுது முரட்டுத்தனமாக லெக் பீஸுடன் பிரியாணி சாப்பிடும் திமுருபிடிச்சவன் விஜய் ஆண்டனியின் புதிய போஸ்டர்

Trending News