வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சசிகுமாரை வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்.. இவருடன் நடிச்ச சூரி-க்கு இப்படி ஒரு நல்ல நேரமா?

Sasikumar and Soori: எப்படி இருந்த சூரி, இப்படி ஆயிட்டாரே என்று சொல்வதற்கு ஏற்ப புரோட்டா சூரியாக அறிமுகமாகி பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து பல நடிகர்களுக்கு நண்பராகவும், காமெடியனாகவும் நடித்து வந்த சூரிக்கு அடித்த ஜாக்பாட் தான் விடுதலை படம். கதையின் நாயகனாகவும், எதார்த்தமான நடிப்பையும் கொடுத்து அனைவரது மனதிலும் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் கதை எழுதி, துரை செந்தில் குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் சூரி நடித்து வருகிறார். இதில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு காட்சி வீடியோவை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்கள்.

அந்த போஸ்டரில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போல் சூரி இவர்கள் இருவருக்கும் நடுவில் கெத்தாக ஹீரோயிசம் காட்டுவது போல் இருக்கிறது. அந்த வகையில் இப்படமும் சூரி-க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படத்திற்கு முன் சூரி, சசிகுமார் ஹீரோவாக நடித்து வந்த படங்களில் நண்பனாக நடித்து காமெடி கேரக்டரை கொடுத்திருக்கிறார்.

Also read: நாட்டாமை உதயநிதி மூலமா சைலன்டா நடந்த செட்டில்மெண்ட்.. வெள்ளைக்கொடி வேந்தனாக மாறிய சூரி

ஆனால் இப்பொழுது சசிகுமார் மற்றும் சூரி ஹீரோவாக கருடன் படத்தில் நடித்து வருகிறார்கள். ஆனால் இந்த படத்திலேயே சசிகுமாருக்கு கெட்ட நேரம் வாட்டி வதைக்கிறது என்று சொல்லலாம். அது என்னவென்றால் இப்படத்தில் சசிகுமார் நடிப்பதற்காக 2 கோடி தான் சம்பளம். ஆனால் சூரி-க்கு 8 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதை விட கெட்ட நேரம் சசிகுமாருக்கு வர முடியுமா, ஆனாலும் இந்த கொடுமையை வெளிக்காட்ட முடியாமல் மனதிற்குளே பூட்டி வைத்து வருகிறார். எனக்கும் ஒரு காலம் நேரம் வரும், அப்பொழுது சொல்லி அடிக்கிறேன் என்று வெயிட் பண்ணுகிறார். அத்துடன் இனிமேல் கொஞ்சம் காலத்திற்கு நடிப்பதை தள்ளி வைத்துவிட்டு படத்தை இயக்குவதில் இறங்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்.

Also read: ரொம்ப பிஸின்னு ஆட்டிட்யூட் காட்டும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் சூரி

Trending News