ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

பாக்யாவை நம்புறது வேஸ்ட், களத்தில் குதித்த சைக்கோ.. ரெண்டுங்கிட்டா நேரத்தில் கர்ப்பமான மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தன் புருஷன் செய்த துரோகத்தை மறந்து குடும்பத்தை நிலை நிறுத்திக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்து வருகிறார். இதற்கிடையில் பாக்யாவை ஒரு வேலைக்காரியாக நினைத்து வேண்டாம் என்று உதறித் தள்ளிட்டு போன கோபி பண நெருக்கடியில் கடன் மேல் கடன் வாங்கி வக்கத்து போய் பாக்கியா வீட்டில் தஞ்சம் அடைந்து விட்டார்.

இதற்கு அடுத்தபடியாக பாக்யாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அதாவது செழியன் கொஞ்சம் பெண் ஆசையில் தட்டு தடுமாறியதால் கோபத்தில் இவரை விட்டு பிரிந்து விட்டார் ஜெனி. அத்துடன் இவர் மீது இருக்கும் கோபத்தினால் தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதை எப்படி சரி கட்டுவது என்று மொத்த குடும்பமும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

அடுத்தபடியாக அமிர்தாவின் முன்னாள் கணவர் ஏற்கனவே பாக்யாவிற்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்திருந்தார். அதாவது வீட்டில் இருப்பவர்களிடம் கணேசனை பற்றி சொல்லி தீர்வு காண வேண்டும் என்ற சைக்கோ மாதிரி பாக்யாவை பிளாக் மெயில் பண்ணி கொண்டு வந்தார். ஆனால் பாக்யாவோ வேலை மற்றும் செழியன் விஷயத்தில் பிஸியாகி விட்டதால் இதை வீட்டில் சொல்லாமல் போய்விட்டார்.

Also read: கதை கிடைக்கலைன்னா சீரியலை மூடுங்கடா எங்க உசுர வாங்காதீங்க.. மட்டமாக உருட்டும் பாக்கியலட்சுமி

அந்த வகையில் இனியும் பாக்யாவை நம்புறது வேஸ்ட் என்று முடிவு பண்ணிய கணேசன் நேரடியாக அமிர்தாவை பார்ப்பதற்கு முயற்சி எடுத்து விட்டார். அப்பொழுது எழில், அமிர்தா மற்றும் நிலா பாப்பா அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு வருகிறார்கள். அமிர்தா தனியாக இருப்பதை பார்த்துக்கொண்டு கணேசன் அமிர்தா என்று கூப்பிட்டதும் திரும்பிப் பார்த்து அதிர்ச்சியாகி விடுகிறார்.

அந்த அதிர்ச்சியில் எழிலை பார்த்து சொல்ல வருகிறார் அமிர்தா. ஆனால் சொல்ல முடியாமல் தட்டு தடுமாறி மயங்கி கீழே விழுகிறார். அப்பொழுது எழில், அமிர்தாவை தாங்கி பிடித்துக் கொள்கிறார். அந்த நேரத்தில் கணேசனும் வந்து அமிர்தா மேல் எழில் வைத்திருக்கும் கையை தூர எடுத்து விட்டு கணேசன் அமிர்தாவை பிடிக்கப் போகிறார். இதை பார்த்த எழிலும் ஷாக் ஆகி நிற்கிறார்.

இப்படி அமிர்தாவின் முன்னாள் கணவர் வந்து நிற்கும் வேலையில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் கிளம்புகிறது. அதாவது அமிர்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த சூழலில் அமிர்தா கண்டிப்பாக எழில்தான் வேணும் என்று முடிவு எடுப்பார். ஆனாலும் இந்த நாடகத்திற்கு தேவையில்லாத ஒரு கேரக்டராக வந்து இவ்வளவு நாள் லாஜிக்கே இல்லாமல் சொதப்பும் படியாக இருந்தது கணேஷ் கேரக்டர் தான். அந்த வகையில் கடைசியாக இந்த கேரக்டருக்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

Also read: பாக்யாவைப் பார்த்து வாய் அடைத்துப் போய் நிற்கும் கோபி அங்கிள்.. சைக்கோ டார்ச்சருக்கு முடிவு கட்டும் மருமகள்

Trending News