வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

புரட்சித்தலைவர் தான் தலைவியை காதலித்தார்.! ஜெயலலிதா காதலித்த 3  நடிகர்களை புரட்டி எடுத்த எம்ஜிஆர்

J. Jayalalithaa loved by 3 actors and MGR warned them: தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருந்து தமிழக அரசியலிலும் கால் பதித்து மக்கள் மனதை வென்றவர்  புரட்சித்தலைவர் எம் ஜி ராமச்சந்திரன். “மக்கள் சேவையே மகேசன் சேவை!” என்று வாழ்ந்து மறைந்த இந்த தங்கத் தலைவன் மூன்று முறை தமிழகத்தின் முதல்வரானார். 

சினிமாவில் பல நல்ல கருத்துள்ள படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்ற எம் ஜி ஆர், செல்வி ஜெயலலிதா அவர்களுடன் அதிகமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. 

செல்வி ஜெயலலிதாவை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருமணம் செய்யாத போதும், அவர் மீது இருந்த மிகை அன்பினால் அவரை காதலித்த மற்ற நடிகர்களை எச்சரித்து அனுப்பினார் என்பது செவி வழி செய்தி. எம்ஜிஆர் எச்சரித்த மூன்று நடிகர்கள் இதோ, 

ரவிச்சந்திரன்: எவர்கிரீன் ரெட்ரோ மூவி “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரவிச்சந்திரன் ஜெயலலிதாவுடன் சில படங்களில் இணைந்து நடித்தார்.  

ஜெயலலிதா பற்றி எம்ஜிஆர் பேச வரும்போது அவரைக் கண்டு கொள்ளாமல் புகைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்தவர், ரவிச்சந்திரனை எச்சரித்தார்.

ஜெய்சங்கர்: எந்தவித ஈகோவும் இல்லாமல் சக நடிகர்களின் நன்மதிப்பை பெற்றவர் ஜெய்சங்கர். பெரும்பாலும் துப்பறியும் படங்களிலேயே நடித்ததால் இவரை தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றே அழைத்தனர்.  

ஜெயலலிதா உடன் நடித்த படங்களில் மிகவும் நெருக்கத்துடன் நடித்ததால் எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளானார் ஜெய்சங்கர். 

ஜெயலலிதாவை மணம் முடித்த தெலுங்கு நடிகர் சோபன்பாபு

சோபன்பாபு: தெலுங்கின் சிறந்த நடிகரான சோபன்பாபு மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே காதல் மலர்ந்ததாகவும், அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.  

அது மட்டுமின்றி இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. 

இறுதி வரை திரை மற்றும் அரசியல் வாழ்வில் பல துயரங்களை எதிர்கொண்டு சிங்கப் பெண்மணியாக வாழ்ந்த ஜெயலலிதா அவர்கள் திருமணம் செய்யாமலே  மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News