ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தீபிகா படுகோன் போல தனக்கென்று தனி தீவு வாங்கிய நடிகை.. வாயடைத்து போன பாலிவுட்!

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்று எத்தனை பேருக்கு தெரியும். கவர்ச்சியில் உச்சத்தில் இருக்கும், பல பாலிவுட் நடிகைகளில் இவறும் ஒருவர். சமீபத்தில், இவர் மீது மோசடி வழக்கு கூட பதிய பட்டது. அதிக சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன் போன்றவர்கள் கூட செய்யாத ஒரு விஷயத்தை இந்த நடிகை செய்துள்ளார்.

சொந்தமாக தீவு வைத்திருக்கும் நடிகை என்று கேட்டது, பலரும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோன் என்று தான் நினைத்திருப்பீர்கள். ஆனால் இவர்கள் யாரும் அந்த விஷயத்தை செய்யவில்லை. அப்போ வேற யாரு? முன்னணி நடிகைகள் கூட செய்ய தயங்கும் விஷயத்தை இந்த நடிகை எப்படி செய்தார் என்று ஆச்சரியமாக உள்ளதா?

இலங்கையை சேர்ந்த ஒரு நடிகை 15 வருடத்திற்கு மேல் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும், தற்போது அவருக்கு சரியான படங்கள் அமையாமல், தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் என்றே சொல்லலாம்.

அவர் நடித்த மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் ஆகியவை படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ‘ஹவுஸ்ஃபுல் 3’ இவருக்கு கடைசி வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் 2016ல் வெளியானது. 2011 முதல் 2014 வரை அந்த நடிகை பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார்.

இதற்கிடையே, 2012-ல் தனக்கு மார்க்கெட் இருக்கும்போதே பல முதலீடுகளை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து, இலங்கையில் ஒரு தனியார் தீவை சொந்தமாக வாங்கினார். ஆடம்பரமாக அவர் இருக்க இந்த தீவை வாங்கி இருந்தாலும், பின்னாட்களில் அந்த தீவு ஒரு சிறந்த முதலீடாகவே இருக்கும்.

தனது சொந்த ஊரில், தீவை வாங்கிய அந்த நடிகை வேறு யாரும் இல்லை. அவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான். இவருடைய நடனம் மிக சிறப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். மேலும் கவர்ச்சியில் பல முன்னணி நடிகையை மிஞ்சி விடுவார். அவர் தான் தனக்கென்று சொந்தமாக தீவு வைத்திருக்கிறார்.

Trending News