வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தொடர்ந்து 8வது வாரமாக நாமினேஷன்க்கு வந்த ஜாக்லின்.. 50 நாட்கள் ஆகியும் சொதப்பும் பிக் பாஸ், காரணம் இதுதான்

Vijay Tv: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் ஆகியும் சுவாரஸ்யம் இல்லாமல் சொதப்புவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தை கமெண்ட்ஸ் மூலம் கொட்டி வருகிறார்கள். அதாவது கடந்த ஏழு சீசன்களிலும் பிரச்சனைகள் சர்ச்சைகள் எல்லாம் வெடித்தது. ஆனாலும் தொடர்ந்து மக்கள் அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து பார்த்து வந்தார்கள்.

அதற்கு காரணம் கமலஹாசன், தீர்ப்பு வழங்குவதில் முன்ன பின்ன இருந்தாலும் அவருடைய பேச்சிலும் போட்டியாளர்களை அணுகும் விதமும் பார்க்க ஒரு ஆர்வத்தை தூண்டும். அத்துடன் யாரிடம் எந்த மாதிரி பேசி பதிலை வர வைக்கணும். தவறு செய்தவர்களை தண்டிக்கும் விதமாக குறும்படம் போட்டு அவர்கள் ஒவ்வொருவருடைய முகத்தையும் காட்டும் விதமாக தரமான விஷயங்களை கமலஹாசன் செய்து வந்திருக்கிறார்.

ஆனால் இந்த சீசனுக்கு வந்த விஜய் சேதுபதி எதார்த்தம் என்கிற பெயரில் போட்டியாளர்களை அடக்குமுறை செய்து அவர் என்ன நினைக்கிறாரோ அந்த பதிலை வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு தான் யுக்தியை பயன்படுத்துகிறார். அதனால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது பலருக்கும் பிடிக்காமல் போய்விட்டது, இதுதான் பிக் பாஸ் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் கூட.

அத்துடன் உள்ளே போன போட்டியாளர்களும் விஜய் டிவியின் சீரியல் ஆர்டிஸ்ட் என்பதால் அந்த அளவுக்கு பார்ப்பதற்கு ஒரு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் 50 நாட்கள் ஆகியும் சுவாரசியமும் இல்லை, சூடு பிடிக்கவும் இல்லை. அத்துடன் இந்த வாரம் நாமினேஷனுக்கு ஜாக்லின் மற்றும் ரஞ்சித் நேரடியாக தேர்வாகியிருக்கிறார்கள்.

மேலும் சிவா, சாச்சனா, அன்ஷிதா, ராயன், ஆனந்தி, மஞ்சரி, விஷால், சத்யா ஆகியோரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இருந்தாலும் ஜாக்லின் மட்டும் தொடர்ந்து எட்டு வாரங்களாக நாமினேட் ஆகி இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் மக்கள் ஓட்டு வாங்கிக்கொண்டு ஜெயித்து உள்ளே இருக்கிறார். அதே மாதிரி இந்த வாரமும் ஜாக்லினுக்கு மக்கள் ஓட்டு அதிகம் உண்டு. அத்துடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சாச்சனா போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News