வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் வைத்த சூனியத்தில் சிக்கிய ஜாக்லின்.. இதெல்லாம் நியாயமே கிடையாது, கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Biggboss8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

அது முத்து தான் என்பது அனைவரின் கருத்தாக இருந்தாலும் விஜய் டிவி கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதேபோல் ஆடியன்ஸ் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுவதிலும் தீயாக இறங்கியுள்ளனர்.

இந்த சூழலில் பிக்பாஸ் பணப்பெட்டி மூலம் ஒரு டாஸ்க் வைத்திருந்தார். பெட்டி வீட்டுக்கு வெளியில் இருக்கும் நிலையில் அதை எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வருவதுதான் டாஸ்க்.

அப்படி வர முடியவில்லை என்றால் அவர்கள் விளையாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதில் முத்து, ரயான், விஷால், பவித்ரா அனைவரும் வெற்றிகரமாக பெட்டியுடன் வீட்டுக்குள் வந்து விட்டனர்.

சௌந்தர்யா பாதியிலேயே மனம் மாறி வீட்டுக்குள் ஓடி வந்து விட்டார். ஆனால் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்ற ஜாக்லின் ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் வைத்த சூனியத்தில் சிக்கிய ஜாக்லின்

அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வர முடியவில்லை. அதனால் விதிமுறைப்படி அவர் வெளியேறி இருக்கிறார். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அதை லைவில் பார்த்த ஆடியன்ஸ் இப்போது விஜய் டிவியை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். ஒரு கடுமையான போட்டியாளராக இத்தனை வாரம் பயணித்த ஒரே ஒரு பெண் ஜாக்லின் மட்டும்தான்.

ஒரு வாரம் தவறாமல் அவர் நாமினேஷன் ஆனபோதும் மக்களால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இப்போது பிக் பாஸ் வைத்த சூனியம் அவருக்கு வினையாகிவிட்டது.

இது நியாயமே கிடையாது. இத்தனை நாள் கடும் உழைப்பை போட்டவர்களுக்கு என்ன மரியாதை. இப்படி ஒரு டாஸ்க் வைத்து ஜாக்லினை வெளியேற்றி சௌந்தர்யாவை காப்பாற்றி இருக்கிறார் பிக் பாஸ் என நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.

ஆம் சௌந்தர்யா இந்த விளையாட்டில் பெரிதாக எந்த சம்பவமும் செய்து விடவில்லை. கத்துவது சண்டை போடுவது க்யூட் என்ற பெயரில் ரியாக்சன் கொடுப்பது இதை தவிர உடல் பலமோ மன பலமோ கொண்டவர் கிடையாது.

அப்படிப்பட்டவர் இறுதி நாள் வரை வீட்டுக்குள் இருக்கிறார். பல நேரங்களில் ஆண்களுக்கு இணையான போட்டியாளராக இருந்த ஜாக்லின் வெளியேறிவிட்டார்.

Trending News