திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இமேஜ் பார்க்காமல் அஜித்துக்கு வில்லனாய் வாய்ப்பு கேட்ட ஜெய்.. கதாநாயகனாக இனி வேலைக்காகாது என்ற முடிவு

ராஜா ராணி வெற்றிக்குப் பிறகு காதல் படம் எதுவும் கை கொடுக்காத நிலையில் இருந்து வருகிறார் ஜெய். இருந்தாலும் தனக்கான ஒரு வெற்றியை பெறுவதற்காக அவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து கொண்டு தான் இருக்கிறார். இந்த சூழலில் ஒரு பிரஸ்மீட்டில் பேசிய அவர் வாய் திறந்து தனக்கு வாய்ப்பு கேட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

மாபெரும் வெற்றி படமான ராஜா ராணி படத்திற்கு பிறகு சரியான ரோல் ஏதும் கிடைக்காத இவர் பட்டாம்பூச்சி என்னும் படத்தில் சுந்தர் சிக்கு எதிராக சைக்கோ வில்லனாய் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டாலும் போதிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஐடி ரைடு, படப்பிடிப்பு தாமதம்.. அஜித்தின் பொறுமையை சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி

இந்நிலையில் ஜெய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் தீரா காதல். படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட இவர் பேசிய போது படத்தைப் பற்றிய விமர்சனங்களை முன் வைத்தார். அதன் பின் இப்படத்தின் இயக்குனரான ரோகின் வெங்கடேசனை பற்றி பெருமைப்பட பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய இவர் ரோகின் வெங்கடேசன், அஜித்திற்கு கதை சொல்ல முயற்சி செய்து வருகிறார். விரைவில் அவர் அக்கதையை சொல்லி அஜித்தின் கால் ஷீட்டை பெறுவார் எனவும் கூறினார். இச்செய்தியை குறித்து நியூஸ் பேப்பரில் படித்ததாகவும் அவர் கூறினார். அதனால் கண்டிப்பாக அப்படத்தில் எனக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும் என்று சிரித்துக் கொண்டே நாசுக்காய் கேட்டுவிட்டார்.

Also Read: அஜித்துக்கு பின் பிரதீப்பை ஏமாற்றி வரும் இயக்குனர்.. தயாரிப்பாளரை காக்க வைத்த சம்பவம்

மேலும் அஜித் போன்ற பெரிய நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் எனவும் கூறினார். என்னதான் ஹீரோவாக நடித்தாலும் இனிமேல் வெற்றி எல்லாம் பெற முடியாது. மேலும் வில்லனாகவும் களமிறங்கி பாத்தாச்சு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று வேதனையாக பேசினார்.

அதனால் இனி இது போன்ற பல பிரபலங்களின் படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெறலாம் என்று ஆசைப்படுவதாக தன் கருத்தை முன் வைத்தார் ஜெய். இத்தகைய செய்தி கேட்பவரை ஆச்சரியப்படுத்தினாலும் ஜெய்யின் நிலைமை இதுதான் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்து வருகிறது.

Also Read: அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. விடாமுயற்சிக்கு ஆப்பு வைத்த முக்கிய பிரச்சனை

Trending News