வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குறட்டையால் சுக்கு நூறாக நொறுங்கிய காதல் கோட்டை.. ஜெய்பீம் நடிகரின் குட் நைட் டீசர்

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மணிகண்டன் தற்போது குட் நைட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே இவர் ரஜினியுடன் இணைந்து காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜெய்பீம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.

அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் குட் நைட் பட டீசரும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. ஜெயம் ரவி இந்த டீசரை வெளியிட்டு மணிகண்டன் மற்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி காதை கிழிக்கும் அளவுக்கு மணிகண்டன் விடும் குறட்டையுடன் இந்த டீசர் ஆரம்பிக்கிறது.

Also read: 2023 வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த 5 படங்கள்.. வாரிசு செய்த வசூல் இத்தனை கோடியா?

அதைத் தொடர்ந்து மணிகண்டன் அடிக்கும் ஒவ்வொரு லூட்டியும் ரசிக்கும் படியாக இருக்கிறது. அதிலும் தன்னை பற்றி பெருமையாக பேசும் அக்கா கணவனிடம் கோபத்தை காட்டும் அந்த காட்சியும், ரோட்டை கடப்பதற்காக செய்யும் குரங்கு சேட்டையும் சிரிப்பை வரவழைக்கிறது.

அதைத் தொடர்ந்து காதலிக்கும் பெண்ணிடம் வழிவது, காதலி பிரிந்து சென்ற பின் கலங்குவது என டீசர் முழுவதும் அவரே ஆக்கிரமித்திருக்கிறார். அந்த வகையில் நான் விட்ட குறட்டையில் என்னுடைய காதல் கோட்டை சுக்கல் சுக்கலாக நொறுங்கி விட்டது என கண்ணீரோடு அவர் புலம்பும் அந்த வசனம் நிச்சயம் கைத்தட்டலை பெறும்.

Also read: சாகுந்தலம் மூலம் கம்பேக் கொடுத்தாரா சமந்தா.. படம் எப்படி இருக்கு?

அதிலும் மோகன் என்ற பெயருக்காகவே ஆயிரம் பெண் கிடைக்கும் என்ற வசனத்தை மைக் மோகனை மனதில் வைத்து எழுதி இருக்கிறார்கள். இப்படி குறட்டை விட்டு அனைத்து உறவுகளையும் துரத்தி விடுகிறார் மணிகண்டன். இவ்வாறு கலாட்டாவாக வெளிவந்துள்ள இந்த டீசர் இப்போது வைரலாகி வருகிறது. விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருக்கும் இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸாக இருக்கிறது.

Trending News