ஆஸ்கர் விருது சினிமா துறையில் ஒரு உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. ஆனால் ஆஸ்கர் விருது இந்திய சினிமாவிற்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
தற்போது 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து இரண்டு படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் மோகன்லாலின் மரைக்காயர் படம் இடம்பெற்றிருந்தது.
ஜெய் பீம் படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளதால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஆஸ்கர் விருது 23 பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்து படங்களின் பட்டியல் வெளியிடுகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய் பீம் படம் இறுதிப் போட்டியில் தகுதி பெறாமல் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது. இது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வினோத் ராஜ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கூழாங்கல். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் முதல் சுற்றிலேயே ஆஸ்கர் தேர்வில் இருந்து வெளியேறியது.
ஆஸ்கருக்கு அயல்மொழி திரைப்படங்களில் இடம்பெற்ற பட்டியலை விக்னேஷ் சிவன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இந்தப் பட்டியலில் “எ ஹீரோ” மற்றும் “கூலாங்கல்” படங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என கண்ணீர் எமோஜியை பயன்படுத்தி தன் வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அத்துடன் ஆஸ்கர் நாமினேஷன் இல் தேர்வானவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.