சென்னை 600028 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஜெய் பெற்றார். ஆனால் அதன் பின்பு அவர் தேர்ந்தெடுத்த நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. பின்பு சுதாரித்துக் கொண்டு ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற வெற்றிக் படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். சென்னை 6000028 படத்தின் போது சில புது இயக்குனர்கள் தன்னிடம் கதை கூறியதாக ஜெய் கூறினார். அப்போது அஜித் சார் என்னிடம் நன்கு பேசி வந்தார். இதனால் அந்தக் கதைகளை அஜித் சாரிடம் கூறினேன்.
அப்போது சுப்ரமணியபுரம் படத்தின் கதையைக் கேட்ட அஜித் சார், இது 80களில் உள்ள கதை என்பதால் வித்தியாசமாக இருக்கும் என்று கூறி தன்னை படத்தில் நடிக்க சொன்னதாக ஜெய் கூறியுள்ளார். அந்த படத்தின் மூலம் தான் சசிகுமாரும் இயக்குனராக அறிமுகமானார்.
மேலும் ஜெய்யின் திரைவாழ்க்கையில் சுப்ரமணியபுரம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியால் தான் ஜெயிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இந்நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விஷயங்களை ஜெய் பகிர்ந்து கொண்டார்.
அஜித் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்த போதும் இவ்வாறு புதுமுக நடிகர்களுக்கும் நேரம் எடுத்து அவர்களுடைய வளர்ச்சிக்கும் உதவியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது ஜெய் பிரேக்கிங் நியூஸ், குற்றம் குற்றமே, காபி வித் காதல், எண்ணித் துணிக, காக்கி உட்பட பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பார்ட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு, ஜெய் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். அந்தவகையில் பார்ட்டி படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஜெய் உள்ளார்.