வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சர்ச்சைகளுக்கு நடுவிலும் சாதித்துக் காட்டிய ஜெய்பீம்.. சூர்யாவை மிஞ்சிய ஹீரோ இவர்தான்

கடந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியே வரக்கூடாது என்று பல அரசியல் கட்சிகளும் போராட்டம் செய்தது.

அதையெல்லாம் தாண்டி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது.

தற்போது இந்த திரைப்படம் மற்றொரு சாதனையும் படைத்திருக்கிறது. அதாவது ஜெய்பீம் திரைப்படம் தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

சினிமாவில் வெளியாகும் சிறந்த திரைக்கதைகளுக்கு ஊக்கம் தெரிவிக்கும் வகையில் இந்த தாதா சாகேப் பால்கே நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடம் தோறும் பல நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து சிறந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த இந்த விருது தமிழ் சினிமாவின் பெருமையாக பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிகவும் பெருமையுடன் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக சமூக கருத்துக்களை கொண்ட படங்களை தயாரித்து வரும் சூர்யாவை அவருடைய ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் ராசா கண்ணு கேரக்டரில் நடித்த மணிகண்டன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறார்.

Trending News