வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

500 கோடி வடைக்கு தயாராகும் ஜெயிலர்.. அதிக வசூலால் வயிற்றெரிச்சலில் ப்ளூ சட்டை போட்ட வைரல் போஸ்ட்

Blue Sattai Maran: ஜெயிலர் அலை ஆரம்பித்ததில் இருந்து ப்ளூ சட்டையின் ஆர்ப்பாட்டம் குறையவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படி எல்லாம் வம்பிழுக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். அதேபோல் ஜெயிலர் பற்றிய மோசமான விமர்சனங்களை பரப்பி வந்த நிலையில் படம் பெருத்த அடி வாங்கும் என்று நினைத்தார்.

ஆனால் அதற்கு நேர் எதிராக ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இதுவரை ரஜினி படம் செய்யாத வசூலை ஜெயிலர் படம் பெற்று வருகிறது. இதனால் ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாத ப்ளூ சட்டை மீண்டும் வடை சுடும் கதையை உருட்டி வருகிறார்.

Also Read : 6வது நாளிலும் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 1000 கோடி தொட்டாலும் அத உடைக்க இவரால மட்டும் தான் முடியும்

அதாவது ஜெயிலர் படம் பொய்யான வசூலை கூறி வருவதாக ப்ளூ சட்டை குற்றச்சாட்டு வைத்துள்ளார். விக்ரம் படத்தின் வசூலை 6 நாட்களில் ஜெயிலர் படம் முறியடித்து விட்டது. இதை கிண்டல் செய்யும் விதமாக சீக்கிரம் அந்த 420+ கோடி வடையை இறக்குங்கப்பா. விக்ரமை வீழ்த்திட்டு நாளைக்கி, 500 கோடி பொன்னியின் செல்வனை தாண்டனும் என ப்ளூ சட்டை பதிவு போட்டிருக்கிறார்.

தொடர்ந்து ஜெயிலர் வசூலை பொய்யாக கூறி வருவதாக ப்ளூ சட்டை பதிவிட்டு வருகிறார். மேலும் அடுத்ததாக கே ஜி எஃப் மற்றும் பாகுபலி வசூலை கூட முறியடித்து விடும் ஜெயிலர் என்பது போல படக்குழு வடை சுட்டு வருகிறது என கூறி இருக்கிறார். மேலும் ரஜினி மீது அப்படி இவருக்கு என்னதான் வன்மம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : தொடர் வசூல் வேட்டை ஆடி வரும் ஜெயிலர்.. 6 நாள் கலெக்ஷனில் ஓரம் கட்டப்பட்ட மூன்று பிரம்மாண்ட படங்கள்

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சர்ச்சை எப்போது வெடித்ததோ அதிலிருந்தே ரஜினியை வம்பிழுக்கும் படியான பதிவு தான் ப்ளூ சட்டை போட்டு வருகிறார். சமீபகாலமாக அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு கூட வக்காலத்து வாங்கும் ப்ளூ சட்டை ரஜினியை மிகவும் டேமேஜ் செய்து வருகிறார். எப்போதுமே இவரின் விமர்சனத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

அதிக வசூலால் வயிற்றெரிச்சலில் ப்ளூ சட்டை போட்ட வைரல் போஸ்ட்

blue-sattai-maran
blue-sattai-maran

ஆனால் இந்த முறை ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை கண்டு கொள்ளாத ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதன் வயித்தெரிச்சல் காரணமாகத்தான் அதை பொறுக்க முடியாமல் ப்ளூ சட்டை தனது ஆதங்கத்தை ட்விட்டர் வாயிலாக மோசமான பதிவை போட்டு வெளிப்படுத்தி வருகிறார்.

Also Read : சன்னியாசியா போனாலும் சக்க போடு போடும் ஜெயிலர்.. குகைக்குள் பாபா வைரல் புகைப்படம்

Trending News