சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பீஸ்ட், அண்ணாத்த படங்களை அசால்ட்டாக உதறி தள்ளிய ஜெயிலர் பிரபலம்.. கமல் படத்தை தேர்ந்தெடுத்து பண்ண மாஸ் வேலை

பல நடிகர்கள் நடிக்க வந்த புதிதில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து, அதன் பின் சில வருடங்கள் உழைத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். ஆனால் சில நடிகர்கள் தங்களது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து அடுத்த படத்தில், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

இதனை அதிஷ்டம் என்று ஒரு பக்கம் கூறினாலும், ஒரு விதத்தில் இப்போதுள்ள காலகட்டத்தில் இருக்கும் இருக்குநர்கள் திறமை இருந்தால் போதுமென அவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்படி ஒரு நடிகர் வெப்தொடர் மூலமாக அறிமுகமாகி பிரபலமான நிலையில், பீஸ்ட், அண்ணாத்த பட வாய்ப்புகள் வந்தபோதும் அதனை உதாசீனப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: அதிக வன்முறை ட்ரெண்டை உருவாக்கிய படம்.. பீஸ்ட், ஜெயிலருக்கு முன்பே குட்டிச்சுவர் ஆகிய இயக்குனர்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி படு தோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் லாஜிக்கில்லாத கதைக்களம் ஒருபக்கம் இருந்தாலும், பீஸ்ட் படத்தில் நடித்த வில்லன்கள் யாரும் ரசிகர்கள் மனதை கவரவில்லை. அதேபோல 2021 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வில்லன்கள் யாரும் சரியாக அமையாததால் இப்படமும் தோல்வியடைந்தது.

அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் வில்லன்கள் கதாபாத்திரம் ஹீரோக்களை காட்டிலும் முக்கியமானதாக ஒரு படத்திற்கு தேவைப்படுகிறது. இதனிடையே அண்மையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் பல பிரபலங்கள் நடித்தனர். இதில் நரசிம்மன் கதாபாத்திரத்தில் நடித்த சிவராஜ்குமாரின் அடியாளாக நடிகர் ஜாபர் சாதிக் நடித்திருப்பார். இவர் 2020 ஆம் ஆண்டு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பாவக்கதைகள் என்ற வெப் தொடர் மூலம் அறிமுகமானார்.

Also Read: பீஸ்ட் வெற்றியா, தோல்வியா.? நெல்சனிடம் விஜய் கூறிய விளக்கம்.. மறுபடியும் இந்த கூட்டணி தொடருமா.?

மொத்தம் 4 இயக்குனர்கள், 4 கதைக்களத்தோடு உருவான இத்தொடரில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான லவ் பண்ணா உட்றனும் என்ற கதைக்களத்தில் நரிக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வில்லனாக ஜாபார் சாதிக் நடித்திருப்பார். உயரம் குறைவாக இருந்தாலும், நடிப்பில் அசத்துகிறார் என ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

பாவக்கதைகள் தொடரில் நடித்தபின் பீஸ்ட், அண்ணாத்த, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு ஜாபர் சாதிக்குக்கு வாய்ப்புகள் வந்துள்ளது. இதில் சில காரணகளால் விக்ரம் படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததாக இவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒருபக்கம் அந்த படங்களில் இவர் நடிக்கவில்லை என பெருமூச்சு விட்டாலும், ஒருவேளை இவர் அந்த படங்களில் நடித்திருந்தால் கண்டிப்பாக வில்லத்தனத்தில் மாஸ் காட்டி ஓரளவுக்காவது, அந்த படங்களுக்கு பெயர் வாங்கி கொடுத்திருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: பீஸ்ட் படத்தில் செஞ்ச தவறை திருத்திய நெல்சன்.. விஜய் தடுத்ததை ரஜினி செய்யலை

- Advertisement -spot_img

Trending News