வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Rajini : விக்ரம், பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்த ஜெயிலர்.. ரஜினியை முந்த வரும் ஹீரோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு படம் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றிருக்கும். அந்த வகையில் லோகேஷ், கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்தது. அதே அடுத்த மூன்று மாதத்தில் ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் வசூலை அள்ளியது.

தற்போது வரை ஜெயிலர் படத்தின் வசூலை மற்ற படங்களால் முறியடிக்க முடியவில்லை. ஆனால் இந்த வருடம் டிசம்பருக்குள் கண்டிப்பாக ஜெயிலர் படத்தை ஏதாவது ஒரு படம் முறியடித்து விடும். ஏனென்றால் பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வரும் ஹீரோ

இந்த வருடம் கமலின் தக் லைஃப் மற்றும் இந்தியன் 2 படங்கள் வெளியாகிறது. விக்ரமின் தங்கலான், விஜய்யின் கோட், ரஜினியின் வேட்டையன், சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

அதோடு சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் நடித்து வரும் படமும் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கங்குவா படம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இதில் ஜெயிலர் வசூலை எந்த ஹீரோ முறியடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்தை அவரது வேட்டையன் படமே முறியடிக்கவும் வாய்ப்பு உள்ளது. வசூல் மன்னனாக திகழ்ந்து வரும் விஜய்யின் கோட் படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என தளபதி ரசிகர்கள் பார்த்து காத்திருக்கிறார்கள்.

Trending News