திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளாத ஜெயிலர் 5 பிரபலங்கள்.. கிழித்து தொங்க விட்ட பயில்வான்

Rajini Jailer Movie: ஜெயிலர் வெற்றி விழா சமீபத்தில் நடந்த நிலையில் அந்த படத்தில் நடித்த பிரபலங்கள் கலந்து கொள்ளாததை பற்றி பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். சமீபகாலமாக படம் வெளியான ஒரு வாரத்திலேயே சக்சஸ் மீட்டிங் வைத்து படக்குழு கொண்டாடுகிறார்கள்.

மேலும் இதில் பத்திரிகையாளர்களை அழைத்து நன்றி தெரிவிக்கின்றனர். முதலாவதாக சன் பிக்சர்ஸ் தான் பத்திரிகை மூலம் இதற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கலாநிதி மாறனே இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று பயில்வான் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் கலாநிதி மாறனுக்கு பத்திரிக்கையாளர் தயவு தேவையில்லை.

Also read: 9வது நாளில் மந்தமான ஜெயிலர் வசூல்.. 500 கோடியை நெருங்க தடுமாறும் டைகர் முத்துவேல் பாண்டியன்

ஏனென்றால் அவர் சன் டிவி என்ற ஊடகத்தை வைத்திருக்கிறார். அதனால் தான் கலாநிதி மாறன் ஜெயிலர் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை. மேலும் ரஜினியும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் இந்த படம் ரிலீசுக்கு முன்பே இமயமலை சென்ற நிலையில் படம் வெற்றி ஆனதால் அப்படியே வேறு இடத்திற்கு சென்று விட்டார்.

மேலும் ரம்யா கிருஷ்ணன் இதில் கலந்து கொள்ளாதது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ் நடிகையான ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து அசத்திய போது பத்திரிக்கையாளர்கள் தான் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால் அவையெல்லாம் மறந்துவிட்டு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

Also read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

மேலும் தமிழ் சினிமா மற்றும் தமிழ் இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் தமன்னா. அவர் கண்டிப்பாக இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அடுத்ததாக இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த விநாயகனும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த படத்திற்கு இசையமைத்த அனிருத் வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் ஜகா வாங்கி விட்டார்.

வசந்த் ரவி, ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் போன்ற சில நபர்கள் மட்டும்தான் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மொத்தத்தில் ஜெயிலர் பிரபலங்களே இல்லாமல் நடந்த சக்சஸ் மீட்டு தான் இது என மொத்தமாக படக்குழுவை நார் அடித்துவிட்டார் பயில்வான் ரங்கநாதன். உலக நாயகன் கமல் பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர் என்றும் கூறியிருக்கிறார்.

Also read: ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி ஆட்டம் போட்ட 6 பாடல்கள்.. கண்ணுக்குள்ளே நிற்கும் ஆட்டமா தேரோட்டமா

Trending News